ஐபிஎல் 3 வருஷத்துக்கு மேல நடக்காதுனு சிஎஸ்கேவுக்கு விளையாடினவர் சொன்னார் – அஸ்வின் சுவாரசியமான தகவல்

0
673
Ashwin

இன்று உலக கிரிக்கெட்டில் இந்திய கிரிக்கெட் வாரியம் மிகப்பெரிய ஆதிக்க சக்தியாக இருப்பதற்கு, இந்தியாவில் 17 ஆண்டுகளாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் மிகப்பெரிய வெற்றி ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. ஐபிஎல் தொடரில் மூலம் நடைபெறும் வணிகம் உலக அளவில் விளையாட்டு முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. ஐபிஎல் தொடரின் ஒரு போட்டிக்கான ஒளிபரப்பு உரிமம் மட்டுமே 118 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

2008 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் வாரியத்தால் முதன் முதலில் துவக்கப்பட்ட ஐபிஎல் டி20 லீக் எட்டு அணிகளுடன் ஆரம்பித்து, இன்று 10 அணிகளாக உயர்ந்திருக்கிறது. மேலும் பெரிய கிரிக்கெட் வாரியங்களான ஆஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியங்களுடன், ஐபிஎல் காலத்தில் அவர்கள் தனிப்பட்ட கிரிக்கெட் தொடர்களில் விளையாடாமல் இருப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

- Advertisement -

இன்று உலகில் உருவாகி வரும் எல்லா கிரிக்கெட் வீரர்களுக்கும் இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும் என்பது ஒரு தனி கனவாக உருவாகி இருக்கிறது. வீரர்களின் சம்பளம் முதல் கொண்டு, அவர்களுடைய பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கான பிற வசதிகள், போட்டி ஏற்பாடுகள் மற்றும் கிரிக்கெட் தரம் என ஐபிஎல் தொடர் ஐசிசி தொடர்களை விட உச்சத்தில் இருக்கிறது.

இதுகுறித்து பேசி இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறும் பொழுது “எனக்கு மிக நன்றாக நினைவிருக்கிறது. நான் சிஎஸ்கே அணியில் விளையாடிய பொழுது என்னுடன் விளையாடிய நியூசிலாந்தின் ஸ்காட் ஸ்டைரிஸ் ஆரம்பத்தில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடிய பொழுது, ஐபிஎல் தொடர் இரண்டு மூன்று வருடங்களுக்கு மேல் நடக்காது என்று நினைத்ததாக கூறியிருந்தார்.

ஐபிஎல் தொடருக்கு வரும் இளைஞனாக நான் நட்சத்திர வீரர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் பத்து ஆண்டுகள் கழித்து ஐபிஎல் தொடர் எப்படி இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. தற்பொழுது பல சீசன்களாக நான் ஐபிஎல் தொடர் விளையாடி வருவதால் என்னால் உறுதியாக சொல்ல முடியும், ஐபிஎல் தொடர் மிகப்பெரியது. மேலும் ஐபிஎல் தொடர் கிரிக்கெட் ஆகுமா என்கின்ற சந்தேகம் கூட எனக்கு உண்டு. ஏனென்றால் கிரிக்கெட் மேடைக்கு பின்னால் செல்கிறது. நாங்கள் விளம்பர படப்பிடிப்பு செட்களில் பயிற்சி செய்கிறோம்.

- Advertisement -

இதையும் படிங்க : சூரியகுமார் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எப்போது திரும்புவார்?.. உடனே விளையாடுவாரா – வெளியான தகவல்கள்

ஐபிஎல் தொடரின் மிக முக்கியமான அம்சம் ஏலம் என்று நான் நினைக்கிறேன். மேலும் ஐபிஎல் அணி உரிமையாளர்கள் ஏலத்தின் மூலம் சரியான வீரர்களை பெற்று சரியான அணியை உருவாக்குவதில் திறமை ஆகி வந்திருக்கிறார்கள். ஐபிஎல் தொடரைப் பொறுத்தவரையில் எந்த வீரரையும் விட அணிதான் பெரிய விஷயம். எனவே அணிகள் மிகவும் புத்திசாலித்தனமாக முதலீடுகளை செய்கின்றன” என்று கூறி இருக்கிறார்.