பல வருஷமா சொல்றேன்.. ஒவ்வொரு நாளும் எங்களை இப்படி சோதிக்குது.. ஆதரவு சுத்தமா இல்ல – சிஎஸ்கே கோச் ஆதங்கம்

0
1205

நேற்று நடைபெற்ற ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் தொடரின் எட்டாவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி இடம் தோல்வியை தழுவியது.

இந்த சூழ்நிலையில் தோல்விக்கான காரணம் குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்மிங் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

சிஎஸ்கே அணி தோல்வி

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. சென்னை மைதானத்தைப் பொறுத்தவரை 170 ரன்களுக்குள் பெங்களூர் அணியை சுருட்டி இருந்தால் வெற்றி பெறுவதற்கு ஓரளவு முயற்சி செய்யக் கூடிய இலக்காக இருந்திருக்கும். ஆனால் ஆர்சிபி அணியின் சிறப்பான ஆட்டத்தால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது.

மேலும் இரண்டாவது பாதியில் பனிப்பொழிவின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நினைத்தபடி எதுவும் சென்னை அணிக்கு சாதகமாக அமையவில்லை. மேலும் பவர் பிளேவில் மூன்று விக்கெட்டுகளை விரைவாக இழந்ததால் அதற்கு மேல் சென்னை அணியால் வெற்றி பெற முடியவில்லை. முடிவில் சென்னை அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் மட்டுமே குவித்து 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

- Advertisement -

எங்களுக்கு இது புரியல

குறிப்பாக சென்னை மைதானம் கடந்த இரண்டு வருடங்களாக சிஎஸ்கேவிற்கு சாதகமான சூழ்நிலைகளை தருவதில்லை என்று அதன் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் கூறியிருக்கிறார். இந்த போட்டியில் சென்னை அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. சிஎஸ்கே வரலாற்றில் சேப்பாக் மைதானத்தில் அடைந்த மிக மோசமான தோல்வியாக இது அமைந்திருக்கிறது. எனவே தோல்விக்கான காரணம் குறித்து பிளம்மிங் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

இதையும் படிங்க:சேப்பாக்கம் மைதானத்தில் சோகம்.. மோசமான ரெக்கார்டை பதிவு செய்த சிஎஸ்கே.. ஐபிஎல் வரலாற்றில் முதல் முறை.. முழு விபரம்

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “சேப்பாக்கத்தில் சொந்த மைதானத்தில் எந்த நன்மையும் இல்லை என்பதை பல வருடங்களாக நாங்கள் உங்களுக்கு சொல்லி வருகிறோம். கடந்த இரண்டு வருடங்களாக இங்குள்ள விக்கெட்டை எங்களால் சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை. எனவே இது புதிது கிடையாது. ஒவ்வொரு நாளும் நமக்கு கிடைப்பதை நாங்கள் புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம். பனிப்பொழிவின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று நினைத்தோம். ஆனால் அப்படி எதுவும் நிகழாமல் ஆடுகளம் ஒட்டும் தன்மையோடு இருந்தது. எனவே அது சென்னை அணிக்கு கடினமாக மாறிவிட்டது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -