சிஎஸ்கேல அடுத்த வருஷம் இந்த பெரிய தலைகள் எதுவும் இருக்காது.. வெளிய அனுப்பிடுவாங்க – சேவாக் பேட்டி

0
165
Sehwag

தற்போது சிஎஸ்கே அணி ஐபிஎல் தொடரில் மிகவும் மோசமான முறையில் செயல்பட்டு வருகிறது. எனவே அடுத்த ஆண்டு சிஎஸ்கே அணி
யிலிருந்து எந்தெந்த வீரர்கள் நீக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்பது குறித்து இந்திய முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக் கூறியிருக்கிறார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி 9 போட்டிகளில் விளையாடி ஏழு போட்டிகளில் தோல்வி அடைந்திருக்கிறது. இதில் வரிசையாக 5 போட்டிகளை முதல்முறையாக தொடர்ந்து தோற்றதும், மேலும் இதில் சொந்த மைதானத்தில் தொடர்ந்து நான்கு போட்டிகளை தோற்றதும் என சிஎஸ்கே செயல்பாடு மிகவும் மோசமாக இருந்து வருகிறது.

- Advertisement -

சிஎஸ்கே அணிக்கான தேவை

சிஎஸ்கே அணி நடந்து முடிந்த மெகா ஏலத்தில் தங்களுடைய மூன்று பிரதான ஸ்பின்னர்களுக்காக மட்டுமே முப்பத்தி எட்டு கோடி ரூபாய் செலவழித்து இருக்கிறது. இவ்வளவு பெரிய தொகையை எந்த அணியும் மூன்று சுழல் பந்துவீச்சாளர்களுக்காக இதுவரையில் செலவு செய்தது கிடையாது. இதன் காரணமாக தரமான பேட்ஸ்மேன்களை வாங்குவதில் சிஎஸ்கே அணிக்கு ஏலத்தில் பெரிய பின்னடைவு உருவாகியது.

எனவே அடுத்த ஆண்டு சிலர் வீரர்களை அணியில் இருந்து நீக்கிவிட்டு பேட்டிங் யூனிட்டை பலப்படுத்துவதற்கு சில முக்கியமான பேட்ஸ்மேன்களை அணிக்குள் கொண்டு வர வேண்டிய தேவை இருக்கிறது. அதே சமயத்தில் இங்கிருந்து 10 ஆண்டுக்கான அணியையும் உருவாக்க வேண்டிய தேவை இருக்கிறது. எனவே அடுத்த ஆண்டு ஐபிஎல் மினி ஏலம் சிஎஸ்கே அணிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது.

- Advertisement -

இவர்களை நிச்சயம் நீக்குவார்கள்

இதுகுறித்து வீரேந்தர் சேவாக் பேசும் பொழுது ” ரவிச்சந்திரன் அஸ்வின், விஜய் சங்கர், ரச்சின் ரவிந்தரா மற்றும் கான்வே நால்வரும் அடுத்த ஆண்டு சிஎஸ்கே அணியில் இருக்க மாட்டார்கள் என்று நான் நினைக்கிறேன். அடுத்த ஆண்டு ஒரு சீசனுக்காக மட்டுமே அணியை உருவாக்க செய்ய முயற்சி செய்யக் கூடாது. அடுத்த 10 ஆண்டுகளுக்கான அணியை உருவாக்க முயற்சி செய்ய வேண்டும். இதற்காக இளம் வீரர்களை அணிக்குள் கொண்டு வர வேண்டும்”

இதையும் படிங்க : தோனி அந்த பெரிய தப்பை செய்யல.. அவர் தியாகி.. இவங்கதான் அத செஞ்சாங்க – சுரேஷ் ரெய்னா விமர்சனம்

“தற்போது சிஎஸ்கே பத்தாவது இடத்தை பிடிக்குமா இல்லையா என்று என்னால் உறுதியாக எதுவும் சொல்ல முடியாது. ஆனால் அவர்கள் பத்தாவது இடத்திற்கு சென்றால் அதுவும் இனிமையானதுதான். ஏனென்றால் அவர்கள் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருப்பது எப்படி என்று இறுதியாக உணர்வார்கள். இத்தனை காலமாக இவ்வளவு போட்டிகளில் விளையாடிய பிறகும் அவர்கள் இன்னும் அதை உணர்ந்திருக்கவில்லை” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -