“நீ பெரிய மனுஷன்யா…” ரயில் விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் எதிர்காலத்தை நான் பார்த்துக்கொள்கிறேன் – மிகப்பெரிய உதவியை அறிவித்த சேவாக்!

0
2211

ரயில் விபத்தில் பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்காத வகையில் மிகப்பெரிய உதவியை செய்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் துவக்க வீரர் வீரேந்திர சேவாக்.

ஒடிசாவில் உள்ள பலசூர் மாவட்டத்தில் நேர்ந்த மிகப்பெரிய ரயில் விபத்தின் காரணமாக கிட்டத்தட்ட 250 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. ஒட்டுமொத்த இந்தியாவையே இந்த சம்பவம் உழுகியுள்ளது. தொடர்ந்து இரண்டாம் நாளாக மீட்பு பணியும் நடைபெற்று வருகிறது.

- Advertisement -

விபத்து நடந்த இடத்திற்கு அருகே இருந்த ரயில் நிலையத்திலிருந்து கொடுக்கப்பட்ட தவறான சிக்னல் காரணமாக இந்த விபத்து நேர்ந்திருக்கிறது என்று முதல் கட்ட அறிக்கையில் தகவல்கள் வந்திருக்கிறது. பிரதமர், மத்திய ரயில்வே அமைச்சர் மற்றும் சில மாநிலங்களில் முதலமைச்சர்கள் என பலரும் விபத்து நேர்ந்த இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறியதோடு மீட்பு பணியை துரிதப்படுத்தவும் பல்வேறு ஏற்பாடுகளை செய்து கொடுத்து வருகின்றனர்.

இந்தியாவில் உள்ள பிரபலங்கள் பலர் இந்த விபத்து குறித்து உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் செய்தி பதிவிட்டு பல்வேறு உதவிக்கரங்களை நீட்டி வருகின்றனர். மேலும் விபத்து நடந்த பகுதிக்கு அருகில் உள்ள கிராமங்களில் மற்றும் நகரங்களில் இருக்கும் இளைஞர்கள் பலர் விபத்து பகுதிக்கு அருகே உள்ள மருத்துவ முகாமிற்கு சென்று ரத்ததானம் செய்து பலருக்கும் முன் உதாரணமாக இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் துவக்க வீரர் வீரேந்திர சேவாக் ட்விட்டர் பக்கத்தில், உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று பதிவிட்டதோடு, இந்த விபத்தில் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு அவர்கள் பள்ளி படிப்பு முடியும் வரை தனது பள்ளியிலேயே இலவசமாக படிக்க வைப்போம். எதிர்காலம் சிறக்க பல்வேறு உதவிகளை செய்வோம் என்று அறிவித்துள்ளார். இது பலரவையும் நெகிழ வைத்துள்ளது. அவரது மனிதாபிமானம் எவ்வளவு உயர்ந்தது என்பதையும் காட்டியுள்ளது அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது:

- Advertisement -