“நாளைக்கு நாங்க ஜெயிக்க அதிக வாய்ப்பு இருக்கு!” – லிட்டன் தாஸ் அதிரடி கருத்து!

0
1450
Litton Das

இந்தியா தற்போது பங்களாதேஷ் அணியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி வென்றிருக்கிறது!

இந்த நிலையில் மூன்றாவது நாளை எட்டி இருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தற்பொழுது நான்கு விக்கெட்டுகளை இழந்து உள்ளது 100 ரண்களை அடிக்க வேண்டி உள்ளது!

- Advertisement -

இந்த டெஸ்டில் இந்திய அணி வெல்ல வேண்டியது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இடம் பெற மிக மிக அவசியம் ஆகிறது. இதனால் ஆடுகளம் தாண்டி வெளியில் நிலவும் சூழலும் இந்திய அணிக்கு அழுத்தமிக்கதாக இருக்கிறது!

பங்களாதேஷ் அணி இந்திய அணியின் நான்காவது இன்னிங்ஸ்க்கு 145 ரன்கள் இலக்காக தந்தது. இதை மூன்றாவது நாளில் இந்திய அணி துரத்திய பொழுது கே எல் ராகுல், கில், புஜாரா, விராட் கோலி ஆகிய நான்கு முக்கிய விக்கெட்டுகளை இழந்து தற்போது நெருக்கடியில் இருக்கிறது. களத்தில் அக்சர் படேல் மற்றும் உனட்கட் ஆகியோர் களத்தில் இருக்கிறார்கள்!

இந்த நிலையில் இந்தப் போட்டியில் பங்களாதேஷ் அணியின் சாதகம் பற்றி அந்த அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் லிட்டன் தாஸ் சில முக்கிய கருத்துகளை பேசி இருக்கிறார்!

- Advertisement -

லிட்டன் தாஸ் கூறும் பொழுது ” இந்த ஆட்டத்தில் நாங்கள் வெற்றி பெறுவது என்பது சாத்தியமானதுதான். நிச்சயமாக ஆட்டத்தில் இந்த நேரத்தில் நாங்கள்தான் முன்னால் இருக்கிறோம். இந்திய அணி அழுத்தத்தில்தான் இருக்கிறது. அவர்கள் ஒரு திட்டத்துடன் வருவார்கள் என்பது உண்மை. ஆனால் நாங்கள் அதை முறியடிப்போம். இந்த ஆடுகளத்தில் நான்காவது இன்னிங்ஸில் நான்காவது நாளில் பேட்டிங் செய்வது எவ்வளவு கடினம் என்பதை நாங்கள் நன்றாகவே அறிவோம்!” என்று கூறியுள்ளார்!

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” நாங்கள் இந்த ஆடுகளத்தில் அவர்களுக்கு இலக்காக 200 ரன்களை கொடுத்து இருக்க வேண்டும். ஆனால் நாளை நாங்கள் சீக்கிரத்தில் ஒன்று, இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தும் பொழுது அவர்கள் அழுத்தத்தில் விழுவார்கள். எங்களுக்கு ஒரு வெற்றி போதுமானது. டெஸ்ட் கிரிக்கெட்டில் உலகின் நம்பர் ஒன் அணியை வீழ்த்துவது எங்களுக்கு மிகப்பெரிய சாதனையாகும் ” என்று கூறியுள்ளார்!