தோனி வெற்றிகரமாக ஓய்வு பெறுவார்னு சொல்லாதிங்க.. ஆனா இது நடக்கும் – ஸ்காட் ஸ்டைரிஸ் பேச்சு

0
241
Dhoni

நடப்பு ஐபிஎல் 17வது சீசன் துவங்குவதற்கு ஒரு நாள் இருந்த பொழுது, சிஎஸ்கே அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து மகேந்திர சிங் தோனி விலகிக் கொண்டார். அவருடைய இடத்திற்கு 27 வயதான துவக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கொண்டுவரப்பட்டார். தோனியின் இந்த முடிவு ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தாலும், அவர் இந்த சீசன் விளையாடுவது மகிழ்ச்சி அளித்திருக்கிறது.

சிஎஸ்கே அணி தனது முதல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆர்சிபி அணிக்கு எதிராக விளையாடியது. இந்த போட்டியில் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே எளிதான வெற்றி பெற்றது. களத்தில் ருதுராஜ் கேப்டன்சி குறை சொல்ல முடியாத அளவிற்கு நன்றாகவே இருந்தது. இது சிஎஸ்கே அணிக்கு பெரிய நல்ல அறிகுறியாகும். தோனி ஓய்வு பெறும் பொழுது அவர்களுக்கு சரியான கேப்டன் கிடைத்திருக்கிறார்.

- Advertisement -

மேலும் சிஎஸ்கே அணிக்காக முதல் முறை அறிமுகமான நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்தரா மற்றும் டேரில் மிட்சல், பங்களாதேஷின் வேகப் பந்துவீச்சாளர் முஸ்தஃபிஸூர் ரஹீம் ஆகியோர் முதல் போட்டியிலேயே சிஎஸ்கே அணிக்கு நல்ல முறையில் செயல்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் அணி உடன் கலந்து சிறப்பானதை கொடுத்ததும் சிஎஸ்கே அணிக்கு பலம் சேர்க்கக் கூடிய விஷயங்களில் ஒன்றாக இருக்கிறது.

ஒட்டுமொத்தமாக சிஎஸ்கே அணியை பார்க்கும் பொழுது அவர்கள் மூன்று துறைகளிலும் பலமாக தெரிகிறார்கள். மேலும் அவர்களிடம்களத்தில் ஆலோசனைகள் சொல்வதற்கு மகேந்திர சிங் தோனிஇருப்பது, அவர்களை இந்த முறையும் இறுதிப் போட்டிக்கு அழைத்துச் செல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றில் இரண்டாவது குவாலிபயர் மற்றும் இறுதிப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இப்படியான காரணத்தினால் மகேந்திர சிங் தோனி ஓய்வு பெறுவதாக இருந்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இறுதிப் போட்டியை விளையாடி வெற்றியும் பெற்று, கோப்பையுடன் மகேந்திர சிங் தோனி ஓய்வு பெறுவது, கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த நிகழ்வுகளில் ஒன்றாக அமையும்.

இதையும் படிங்க: கோலி நேற்றிரவு இதைத்தான் யோசித்து இருப்பார்.. நிச்சயம் சந்தோஷப்பட்டு இருக்க மாட்டார் – ஏபி.டிவில்லியர்ஸ் பேச்சு

இதுகுறித்து நியூசிலாந்தின் முன்னாள் ஆல்ரவுண்டர் சிஎஸ்கே வின் முன்னாள் வீரர் ஸ்காட் டைரிஸ் கூறும் பொழுது “சிஎஸ்கே தற்பொழுதும் சிறப்பாகவே இருப்பதாக தெரிகிறது. அவர்கள் இறுதிப் போட்டிக்கு வருவதற்கான எல்லா வாய்ப்புகளும் இருக்கிறது. ஆனால் தோனி இறுதிப் போட்டியில் வெற்றிகரமாக ஓய்வு பெறுவார் என்று இப்போது சொல்ல முடியாது. ஆர்சிபி அணிக்கு எதிராக அவர்கள் விளையாடிய விதத்தில் நன்றாக இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். புதிய வீரர்கள் அனைவரும் பங்களிப்பை செய்தது அந்த அணிக்கு நல்ல அறிகுறியாக அமைந்திருக்கிறது. சிஎஸ்கேவின் பலம் எப்போதும் அவர்கள் இரண்டு வீரர்களை நம்பி இருக்க மாட்டார்கள். அதைத் தாண்டி சிறப்பாக செயல்படும் வீரர்கள் இருப்பார்கள்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -