இந்திய அணி ஆடும் அடுத்த 4 பெரிய தொடர்கள்.. யாருடன் எப்போது தொடங்குகிறது?.. முழு விபரங்கள்

0
1275
Bcci

தற்போது இங்கிலாந்து டெஸ்ட் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டிருக்கும் இந்திய அணி அடுத்து விளையாட உள்ள 4 முக்கிய கிரிக்கெட் தொடர்களுக்கான அட்டவணை என்னவென்று பார்க்கலாம்.

இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடுவதற்கு நீண்ட சுற்று பயணத்தை செய்து முடித்திருக்கிறது. இந்த நிலையில் அடுத்த இந்திய அணி விளையாடும் தொடர்கள் என்னவென்று ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

- Advertisement -

எடுத்ததும் தெரிய தொடர்

இந்திய அணி ஆகஸ்ட் மாதம் முழுவதும் ஓய்வெடுத்து செப்டம்பர் 10 ஆம் தேதி டி20 கிரிக்கெட் வடிவத்தில் யுனைடெட் அரபு எமிரேடில் துவங்கும் ஆசியக் கோப்பை தொடரில் விளையாடுகிறது. செப்டம்பர் 10 யுஏஇ, செப்டம்பர் 14 பாகிஸ்தான், செப்டம்பர் 19 ஓமன் அணிகளுக்கு எதிராக லீக் சுற்றில் விளையாடுகிறது. இதில் வெற்றி பெற்றால் அடுத்து அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

இதைத் தொடர்ந்து உள்நாட்டில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடுகிறது. அக்டோபர் 2ம் தேதி குஜராத் அகமதாபாத் மைதானத்தில் முதல் டெஸ்டிலும், அக்டோபர் 12ம் தேதி டெல்லி அருண் ஜெய்ட்லி மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டியும் நடைபெறுகிறது.

- Advertisement -

பெரிய இரண்டு தொடர்கள்

இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஆகியவற்றில் பங்கே இருக்கிறது. மீண்டும் இந்தியா திரும்பி வந்து தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடுகிறது.

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம்

அக்டோபர் 19 – 1வது ஒருநாள் போட்டி (பெர்த்)
அக்டோபர் 23 – 2வது ஒருநாள் போட்டி (அடிலெய்டு)
அக்டோபர் 25- 3வது ஒருநாள் போட்டி (சிட்னி)
அக்டோபர் 29- 1வது டி20 (கான்பெர்ரா)
அக்டோபர் 31 – 2வது டி20 (மெல்போர்ன்)
நவம்பர் 02 – 3வது டி20 (ஹோபர்ட்)
நவம்பர் 06- 4வது டி20 (கோல்ட் கோஸ்ட்)
நவம்பர் 08- 5வது டி20 (பிரிஸ்பேன்)

இதையும் படிங்க: கம்பீரும் பெரிய ஆள்தான்.. கடைசி டெஸ்ட் 5வது நாளில் செய்த 2 மாஸ் மூவ்.. இந்திய அணியை தப்பிக்க வைத்த சம்பவம்

தென் ஆப்பிரிக்க தொடர்:

நவம்பர் 14- 1வது டெஸ்ட் (கொல்கத்தா)
நவம்பர் 22 – 2வது டெஸ்ட் (குவஹாத்தி)

நவம்பர் 30- முதல் ஒருநாள் போட்டி (ராஞ்சி)
டிசம்பர் 03- 2வது ஒருநாள் போட்டி (ராய்ப்பூர்)
டிசம்பர் 06- 3வது ஒருநாள் போட்டி (விசாகப்பட்டினம்)

டிசம்பர் 09 – முதல் டி20 (கட்டக்)
டிசம்பர் 11- 2வது டி20 (முல்லன்பூர்)
டிசம்பர் 14- 3வது டி20 (தர்மசாலா)
டிசம்பர் 17 – 4வது டி20 (லக்னோ)
டிசம்பர் 19- 5வது டி20 (அகமதாபாத்)

- Advertisement -