கம்பீரும் பெரிய ஆள்தான்.. கடைசி டெஸ்ட் 5வது நாளில் செய்த 2 மாஸ் மூவ்.. இந்திய அணியை தப்பிக்க வைத்த சம்பவம்

0
322
Gambhir

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில் துவக்கத்தில் கம்பீர் கொண்டு வந்த இரண்டு திட்டங்கள் குறித்து தற்போது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.

இந்திய இளம் டெஸ்ட் அணியை இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை யாரும் எதிர்பார்க்காத வகையில் இரண்டு இரண்டு என சமன் செய்து நாடு திரும்பி இருப்பது பாராட்டுகளை பெற்று வருகிறது. இந்த நிலையில் கேப்டன் வில் பேட்டிங் மற்றும் கம்பீரின் சில திட்டங்கள் இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது.

- Advertisement -

கம்பீரின் சரித்திர தோல்விகள்

கம்பீர் இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக வந்த பிறகு 27 ஆண்டுகள் கழித்து இந்திய அணி இலங்கை அணிக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் தொடரை இழந்தது. மேலும் உள்நாட்டில் முதல் முறையாக நியூசிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் ஒயிட் வாஷ் ஆனது.

மேலும் ஆஸ்திரேலியா சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒன்றுக்கு மூன்று என இருந்தது. காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பையும் இழந்தது. இதன் காரணமாக அவருடைய டெஸ்ட் பயிற்சியாளர் பதவி ஆபத்தில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

கம்பீரின் கலக்கல் திட்டங்கள்

நடந்து முடிந்த ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் நான்கு விக்கெட் கைவசம் இருக்க வெற்றி பெற 35 ரன்கள் மட்டுமே இங்கிலாந்து வேலைக்கு தேவைப்பட்டது. இதன் காரணமாக ஸ்லிப் பகுதியில் பீல்டர்கள் இருந்த போதும் அவர்களுக்குப் பின்னாலும் தேர்ட் மேன் பகுதியில் கூடுதலாக ஒரு பீல்டர் வைத்து பவுண்டரியை தடுத்தார்கள்.

இதையும் படிங்க: சுப்மன் கில் தற்காப்பு மனநிலையில் இருக்கிறார்.. ஆனால் இந்த விசயம் எனக்கு பிடிச்சி இருந்தது.. அஜய் ஜடேஜா கருத்து

மேலும் 80 ஓவர்கள் வீசப்பட்ட பந்தை மாற்றி புதிய பந்தை வாங்காமல் தொடர்ந்து பழைய பந்திலேயே வீசி வெற்றியும் பெற்று முடித்தார்கள். காரணம் பழைய பந்து நன்றாக ஸ்விங் மற்றும் ஸ்விங் ஆனது. இதன் காரணமாக புத்திசாலித்தனமாக பழைய பந்தை மாற்றாமல் இருந்தார்கள். இந்த திட்டங்களுக்கு பின்னால் பயிற்சியாளர் கம்பீர் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே தற்பொழுது அவரை சமூக வலைதளத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பாராட்டு வருகிறார்கள்.

- Advertisement -