நம்ம ஊரு நம்ம கெத்து – 2022ஆம் ஆண்டு டிஎன்பிஎல் தொடருக்கான எக்ஸ்க்ளூசிவ் போட்டி அட்டவணை

0
238

டாட்டா ஐபிஎல் தொடர் வெற்றிகரமாக நடந்து முடிந்ததைத் தொடர்ந்து வருகிற ஜூன் 23ஆம் தேதி முதல் தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் நடைபெற இருக்கின்றது. ஜூன் 23 துவங்கிய ஜூலை மாதம் 31ஆம் தேதி வரையில் தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் நடைபெற இருக்கின்றது குறிப்பிடத்தக்கது.

8 அணிகள் பங்கேற்க போகும் இத்தொடர் தமிழ்நாட்டில் உள்ள நான்கு நகரங்களில் நடைபெறப் போகின்றது. திருநெல்வேலி, சேலம், திண்டுக்கல் மற்றும் கோயம்புத்தூரில் அனைத்துப் போட்டிகளும் நடைபெற போகின்றது.

- Advertisement -

முப்பத்தி இரண்டு போட்டிகள் கொண்ட தொடர் ஆக நடைபெற இருக்கும் டிஎன்பிஎல்

லீக் சுற்றில் இருபத்தி எட்டு போட்டிகள் அதைத் தொடர்ந்து பிளே ஆப் சுற்றில் நான்கு போட்டிகள் என மொத்தமாக முப்பத்தி இரண்டு போட்டிகள் நடைபெற இருக்கின்றது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ், லைகா கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ், ஐட்ரீம் திருப்பூர் தமிழன், சீசெம் மதுரை பாந்தர்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் என மொத்தமாக எட்டு அணிகள் நடைபெற இருக்கின்ற தொடரில் பங்கேற்க உள்ளன.

தொடரின் முதல் போட்டி வருகிற 23ம் தேதி திருநெல்வேலியில் நடைபெற இருக்கின்றது. அப்போட்டியில் சேப்பாக் அணியும் நெல்லை அணியும் எதிர்கொள்ள இருக்கின்றன. இப்போட்டி இரவு 7:15 மணிக்கு தொடங்கும்.

- Advertisement -

கடந்த ஆண்டு நடந்த டிஎன்பிஎல் தொடரில் சேப்பாக் அணி பட்டம் வென்றது. திருச்சி அணி ரன்னர் அப் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.