இந்தியா – ஆஸி பிரதமர் XI பயிற்சி போட்டி.. எப்போது நடக்கிறது.. எந்த டிவியில் பார்க்கலாம்? – முழு விபரங்கள்

0
296
ICT

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா பிரதமர் லெவல் அணிகள் மோதும் இரண்டு நாட்கள் கொண்ட பகல் இரவு டெஸ்ட் பயிற்சிப்போட்டி அட்டவணை மற்றும் ஒளிபரப்பு விபரங்கள் வெளியிடப்பட்டு இருக்கிறது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே டிசம்பர் 6ம் தேதி அடிலெய்ட் மைதானத்தில் இரண்டாவதுடெஸ்ட் போட்டி பகல் இரவு டெஸ்ட் போட்டியாக நடைபெற இருக்கிறது. இதற்கு முன்பாக இந்த போட்டிக்கு தயாராகும் விதமாக இந்திய அணி இரண்டு நாட்கள் பகல் இரவு பயிற்சி டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கிறது.

- Advertisement -

ஆஸ்திரேலியாவின் சாதனை

இதுவரை ஆஸ்திரேலியா அணி விளையாடிய பகல் இரவு டெஸ்ட் போட்டியில் ஒரு போட்டியை கூட தோற்றது கிடையாது. ஆஸ்திரேலிய அணியை பகல் இரவு டெஸ்டில் தோற்கடிப்பது மிகவும் கடினமான ஒன்றாக இருந்து வருகிறது. அவர்களுடைய வேகப்பந்து வீச்சாளர்கள் பிங்க் நிற பந்தில் சிறப்பான திறமையை பெற்றிருக்கிறார்கள்.

எனவே இந்திய அணி பகல் இரவு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்வதற்காக பகல் இரவு பயிற்சி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணிக்கு எதிராக நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1 என இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சி போட்டியில் விளையாடுகிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி காலை 9:30 மணிக்கு துவங்குகிறது.

- Advertisement -

எந்த தொலைக்காட்சியில் பார்க்கலாம்?

இரு அணிகளுக்கும் இடையே நவம்பர் 30ஆம் தேதி துவங்க இருக்கும் இந்த பயிற்சி பகல் இரவு டெஸ்ட் போட்டியை டிஸ்னி ஹாட் ஸ்டார் ஒளிபரப்பு செய்கிறது. எனவே ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியிலும், ஆன்லைனில் டிஸ்னி ஹாட்ஸ்டாரிலும் பார்க்கலாம்.

இந்த போட்டிக்காக ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் ஆஸ்திரேலியா அணிக்காக விளையாடும் வேகப்பந்துவீச்சாளர் ஸ்காட் போலந்து இடம் பெற்று இருக்கிறார்.

இதையும் படிங்க : லபுசேன் உண்மையில் அந்த விஷயத்தில் எங்ககிட்ட நடிக்கிறார்.. நான் விடமாட்டேன் – சிராஜ் பேட்டி

பிரதமர் XI அணி : ஜாக் எட்வர்ட்ஸ் (கே),
சார்லி ஆண்டர்சன், மஹ்லி பியர்ட்மேன், ஸ்காட் போலண்ட், ஜாக் கிளேட்டன், ஐடன் ஓ’கானர், ஒல்லி டேவிஸ், ஜேடன் குட்வின், சாம் ஹார்பர், ஹன்னோ ஜேக்கப்ஸ், சாம் கான்ஸ்டாஸ், லாயிட் போப், மேத்யூ ரென்ஷா மற்றும் ஜெம் ரியான்.

- Advertisement -