ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் களத்தில் தனக்கும் லபுசேனுக்கும் இடையில் நடந்த விஷயங்கள் பற்றி இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் பேசியிருக்கிறார்.
முதல் டெஸ்ட் முதல் இன்னிங்ஸில் பும்ரா பந்துவீச்சில் லபுசேன் பும்ரா பந்துவீச்சில் தந்த எளிய கேட்ச் வாய்ப்பை விராட் கோலி தவற விட்டதால் தப்பித்தார். ஆனால் முகமது சிராஜ் அவரை வெளியேற்றினார். மேலும் இரண்டாவது இன்னிங்ஸில் பும்ரா விட்டதை பிடித்து வெளியேற்றினார்.
மோசமான பேட்டிங் ஃபார்ம்
தற்போது லபுசேன் பேட்டிங் ஃபார்ம் மிகவும் மோசமாக இருந்து வருகிறது. கிரீசில் அவரது கால்கள் நகர்வதற்கு சிரமப்படுவது தெளிவாக தெரிகிறது. ஆனால் அவர் வழக்கம் போல் தான் மிகவும் தன்னம்பிக்கையுடன் இருப்பதாக காட்டிக் கொள்ள, பந்தை வெளியில் விடும் பொழுது ஏதாவது சத்தங்கள் எழுப்பி எதிரணி கவனத்தை திருப்புகிறார்.
இருந்தபோதிலும் களத்தில் அவருடன் முகமது சிராஜ் மற்றும் ஹர்ஷித் ராணா இருவரும் சில சூடான பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டார்கள். அவர் பந்தை தடுத்து விளையாடுவதை விட வெளியில் விட்டு விளையாடி தனக்கு ஃபார்ம் இல்லாததை மறைக்கப் பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
லபுசேன் இந்த மாதிரி செய்கிறார்
இது குறித்து முகமது சிராஜ் கூறும் பொழுது “நான் லபுசேனுக்கு பந்து வீச விரும்புகிறேன். அவர் மிகுந்த அழுத்தத்தில் விளையாடுவதால் அவருக்கு எதிரான போட்டியில் நான் மகிழ்கிறேன். அவர் நிறைய பந்துகளை விளையாடாமல் பந்துகளை வெளியில் விட்டு விளையாட நினைக்கிறார். அவர் இப்படி தன்னை தற்காத்துக் கொண்டு தன்னம்பிக்கையுடன் இருப்பதாக காட்டிக் கொள்கிறார். ஆனால் உண்மையில் அவர் தன்னம்பிக்கையாக இல்லை. ஆனால் இப்போது எனது நம்பிக்கை அதிகமாக இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : கேஎல் ராகுலை விட ரிஷப் பண்ட் இப்ப பாவம்.. லக்னோல இந்த பிரச்சனை இருக்கு – முகமது கைஃப் விளக்கம்
மேலும் லபுசேன் பற்றி மைக்கேல் கிளார்க் கூறும் பொழுது “தற்போது அவரை நீக்குவது பற்றி வெளியில் பேசி வருகிறார்கள். அவருக்கு பேட்டிங் ஃபார்ம் தற்போது இல்லையென்றாலும் கூட, இப்போதைக்கு அவர்தான் மூன்றாவது இடத்திற்கான சிறந்த பேட்ஸ்மேன். அவர் தனது தயாரிப்பை சரியாக செய்து மனதை சரியாக வைத்துக் கொண்டு போட்டிக்கு முன்பாக கொஞ்சம் கிரிக்கெட்டில் இருந்து விலகி இருக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.