“திரும்ப வந்துட்டேன்னு சொல்லு” ….. பதிலடி கொடுத்த இந்தியா …. கில்128! கோலி 59* அபாரம்!

0
4664

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஸ்திரேலியா அணி நான்கு டெஸ்ட் போட்டிகளை கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இந்தத் தொடரின் முதல் மூன்று டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்தியா அணி இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அணி ஒரு டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. இரண்டு அணிகளுக்கும் இடையேயான நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த வியாழக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி சிறப்பாக ஆடி 480 ரன்கள் ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் உஸ்மான் கவாஜா மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோர் சதம் அடித்தனர் . இந்திய அணியின் தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் சிறப்பாக பந்துவீசி ஆரம்பிக்கெட்டுகளை வீழ்த்தினார் . இந்நிலையில் நேற்று தனது முதல் இன்னிங்ஸ் தொடங்கிய இந்தியா இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 36 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி களத்தில் இருந்தது.

- Advertisement -

இந்நிலையில் இன்று மூன்றாவது நாள் ஆட்டத்தை இந்திய அணியின் துவக்க வீரர்கள் சிறப்பாக தொடங்கினர். முதலாவது விக்கெட் இருக்கு 74 ரன்கள் சேர்த்த நிலையில் அணியின் கேப்டன் ரோகித் சர்மா 34 ரன்கள் எடுத்து துரதிஷ்டவசமாக ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து ஆட வந்த புஜாரா சுப்மன் கில்லுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர்கள் இருவரும் இரண்டாவது விக்கெட்க்கு 113 ரன்களை சேர்த்தனர். இந்தத் தொடரில் தனது இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் சுப்மண் கில் தனது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது சதத்தை விலாசினார்.

இவருடன் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த புஜாரா 42 ரன்களில் அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து ஆட வந்தார் இந்திய அணியின் ஸ்டார் பேட்ஸ்மேன் விராட் கோலி. இவர் தொடக்கத்தில் சிறிது தடுமாறினாலும் அதன் பிறகு தன்னுடைய வழக்கமான ஆட்டத்தின் மூலம் அசத்தினார். இந்திய அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. விராட் கோலியும் சுப்மண் கில்லும் இணைந்து மூன்றாவது விக்கெட்க்கு ஜோடியாக 68 ரன்கள் சேர்த்தனர். அணியின் எண்ணிக்கை 245 ஆக இருந்தபோது சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த கில் நேத்தன் லியான் பந்துவீச்சில் எல்பி டபிள்யு முறையில் ஆட்டம் இழந்தார். இவர் சிறப்பாக ஆடி 128 ரன்களை சேர்த்து இருந்தார். இதில் 12 பவுண்டரிகளும் ஒரு சிக்ஸ் அடங்கும்.

இவரைத் தொடர்ந்து விராட் கோலி உடன் இணைந்தார் ரவீந்திர ஜடேஜா. இந்தத் தொடரில் முதல் மூன்று போட்டிகளிலும் சொற்பரன்களில் ஆட்டம் இழந்த விராட் கோலி இந்தப் போட்டியில் சிறப்பாக ஆடி அரை சதம் எடுத்தார் . இது 16 டெஸ்ட் இன்னிங்ஸ்களுக்கு பிறகு விராட் கோலி எடுக்கும் அவரது முதல் அரை சதம் ஆகும். கடைசியாக விராட் கோலி 2022 ஆம் ஆண்டு துவக்கத்தில் தென் ஆப்பிரிக்கா அணியுடன் அரை சதம் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது . ரவீந்திர ஜடேஜா ஒருபுறம் நிதானமாக ஆட விராட் கோலி அவ்வப்போது பௌண்டரிகளுக்கு விரட்டி இந்திய அணியின் ஸ்கோர் உயர காரணமாக இருந்தார். இன்றைய மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 289 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்திருக்கிறது. விராட் கோலி 59 ரன்கள்டனும் ரவீந்திர ஜடேஜா 16 ரன்கள்டனும் களத்தில் உள்ளனர்.

- Advertisement -