“விளம்பர போர்டுல பார்த்தேன் ஹர்திக் உடம்பு நல்லா தானே இருக்கு.. விடுங்க ஜடேஜா அஸ்வின் இருக்காங்க!” – ஹர்திக் பாண்டியா மீது கபில்தேவ் பாய்ச்சல்!

0
780
Hardikpandya

உலக கிரிக்கெட்டில் எப்பொழுதும் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர்களுக்கு தனி மரியாதையும், தேவையும் இருக்கும். ஏனென்றால் ஒரு வேகப்பந்து வீச்சாளர் அணியில் கொடுக்கின்ற உழைப்பு என்பது எல்லோரையும் விட அதிகம். மேலும் ஒரு வேகப்பந்துவீச்சாளர் பேட்டிங் செய்யக் கூடியவராக இருப்பதால், விளையாடும் அணியை விருப்பப்படும்படி மாற்றி அமைக்க வசதியாக இருக்கும்!

இப்படியான காரணங்களால் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்களுக்கு உலகம் முழுவதிலும் உள்ள கிரிக்கெட்அணிகளில் அதிகபட்ச தேவை இருக்கும். மேலும் அப்படி கிடைக்கும் வேகபந்துவீச்சு ஆல்ரவுண்டர்களுக்கு அணியில் நல்ல முக்கியத்துவமும் மரியாதையும் கிடைக்கும்.

- Advertisement -

இந்திய கிரிக்கெட்டை எடுத்துக் கொண்டால் கபில்தேவை தவிர வேறு யாரையும் முழுமையான வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் என்று சொல்லிவிட முடியாது. அதே சமயத்தில் அவருக்கு பின்னால் குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு இருந்தது இர்பான் பதான் ; இருப்பது ஹர்திக் பாண்டியா!

இதில் யாரும் எதிர்பாராத விதமாக 30 வயதிற்கு முன்பாகவே இர்பான் பதான் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டது. இன்னொரு பக்கத்தில் காயத்தில் சிக்கிய ஹர்திக் பாண்டியா மிக முக்கியமாக விளையாட வேண்டிய டெஸ்ட் கிரிக்கெட் பக்கம் வருவதே கிடையாது. அவருடைய உடல் எந்த அளவில் இருக்கிறது? என்று இப்பொழுது வரை யாருக்கும் தெரியாது.

தற்சமயத்தில் பேசி இருந்த இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன், இந்திய அணிக்கு இப்பொழுது தேவை விராட் கோலி, ரோஹித் சர்மா போன்றவர்கள் கிடையாது மிட்சல் மார்ஸ் மற்றும் கேமரூன் கிரீன் போன்றவர்கள் தான் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

தற்பொழுது இது குறித்து பேசி உள்ள லெஜெண்ட் கபில்தேவ் கூறும்பொழுது
“நான் இப்பொழுது ஒரு விளம்பரப் பலகையில் அவரது புகைப்படத்தை பார்த்தேன். அதில் ஏதாவது டச்சப் செய்தார்களா என்று தெரியாது. ஆனால் அவருக்கு நம்மிடையே இருப்பவர்களில் மிகச்சிறந்த உடல் அமைப்பு இருக்கிறது. அவர் அதிக கிரிக்கெட்டில் விளையாட வேண்டும். ஏனென்றால் அவருக்கு அதிக திறன் உள்ளது. அவருக்கு உடல் தகுதி இருந்தால் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டையும் விளையாட வேண்டும்.

என்னைப் பொறுத்தவரை வீரர்களை ஒப்பிடுவது சரியான ஒன்று கிடையாது. உங்களுக்கு வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர்கள் எப்படி தேவையோ அதே அளவு சுழற் பந்துவீச்சு ஆல்ரவுண்டர்களும் தேவை. மேலும் இந்த விஷயத்தில் இந்திய அணியில் சில ஒழுக்கமான வீரர்கள் இருக்கிறார்கள். இதில் ஜடேஜா அற்புதமானவர். அஸ்வின் மிகச்சிறப்பாக செயல்படுகிறார். அதனால் எங்களிடம் ஆல்ரவுண்டர்கள் இல்லை என்பது கிடையாது!” என்று கூறியிருக்கிறார்!