இந்திய கிரிக்கெட்

35/5.. புஜாரா டக் அவுட்.. பேட்டிங் பவுலிங் மாஸ் காட்டிய தமிழ்நாடு அணி.. இன்னிங்ஸ் வெற்றிக்கு வாய்ப்பு.. ரஞ்சி டிராபி 2024.

நடப்பு 2024 ஆம் ஆண்டு ரஞ்சி சீசனில் முதல் போட்டியில் தமிழக அணி பலம் வாய்ந்த சௌராஷ்டிரா அணிக்கு எதிராக இன்னிங்ஸ் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பில் இருக்கிறது.

- Advertisement -

இரண்டு நாட்களுக்கு முன்பு துவங்கிய இந்த ஆண்டு ரஞ்சி டிராபி சீசனில் ஒரு போட்டியில் ஜெயதேவ் உனட்கட் தலைமையிலான சௌராஷ்டிரா அணியும் சாய் கிஷோர் தலைமையிலான தமிழக அணியும் மோதிக்கொண்டன.

தமிழகத் தொடக்க ஆட்டக்காரர்கள் அபாரம்

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சௌராஷ்டிரா அணி 203 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் புஜாரா 41 பந்துகளை சந்தித்து வழக்கம்போல் 16 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டம் இழந்தார். அர்பித் வஸ்தவா தாக்குப்பிடித்து விளையாடி 149 பந்துகளில் 62 ரன்கள் எடுத்தார். தமிழக அணியின் தரப்பில் சாய் கிஷோர், முகமத் முகமத் மற்றும் சோனு யாதவ் தலா மூன்று விக்கெட் கைப்பற்றினார்கள்.

இதைத் தொடர்ந்து விளையாடிய தமிழக அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் சாய் சுதர்சன் 159 பந்துகளில் 82 ரன்கள், நாராயணன் ஜெகதீசன் 165 பந்துகளில் சரியாக 100 ரன்கள் எடுத்தார்கள். தொடக்க ஜோடியின் அபார ஆட்டத்தால் தமிழக அணி 367 ரன்கள் குவித்தது. ஜெயதேவ் உனட்கட் ஆறு விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

மீண்டும் சிக்கிய சௌராஷ்டிரா அணி

இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் ஸ்கோரில் பின்தங்கி இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய சௌராஷ்டிரா அணிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக காத்திருந்தது. அந்த அணி தற்பொழுது மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 35 ரன்கள் 5 விக்கெட்டுகளை இழந்து மோசமான நிலையில் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடிக் கொண்டிருக்கிறது.

இதையும் படிங்க : பாபர் அசாமை நீக்கியது தப்பு.. இந்தியா கோலியை விட்டு தந்ததா.. 2020-23 என்ன நடந்தது தெரியுமா? – பகார் ஜமான் எதிர்ப்பு

சௌராஷ்டிரா அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் புஜாரா இந்த முறை ரன் ஏதும் எடுக்காமல் மீண்டும் பெரிய ஏமாற்றத்தை கொடுத்தார். தமிழக அணியின் தரப்பில் குர்ஜப்நீட் சிங் நான்கு விக்கெட் கைப்பற்றி இருக்கிறார். தமிழக அணி முதல் இன்னிங்ஸ் முன்னிலை பெற்றிருக்கிறது. மேலும் நாளை மேலும் ஐந்து விக்கட்டுகளை கைப்பற்றி வெற்றி பெறுவதற்கான அதிகபட்ச வாய்ப்பிலும் இருக்கிறது. எனவே தமிழக அணி நடப்பு ரஞ்சி சீசனை பெரிய அணிக்கு எதிராக வெற்றியுடன் ஆரம்பிக்க இருக்கிறது!

- Advertisement -
Published by