தேசிய அணியில் அவ்வப்போது நிழலிடப்பட்ட சர்பராஸ் கான் தற்போது தென்னாப்பிரிக்கா சென்றிருப்பது கிரிக்கெட் ஆர்வலர்களிடையே சற்று ஆச்சரியத்தைத் தூண்டி உள்ளது.
முதல் தர கிரிக்கெட் போட்டியில் தொடர்ந்து தனது திறமையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் சர்ப்ராஸ் கான், இந்திய தேசிய அணியில் தற்போது வரை இடம் கிடைக்காமல் இருப்பது ஆச்சரியம் அளிக்கும் வகையில் உள்ளது. இந்த 26 வயது இளைஞன் 40 முதல் தர போட்டிகளில் விளையாடி 3589 வியக்கத்தகு ரன்களைக் குவித்துள்ளார். இவரின் பேட்டிங் சராசரி 71.78 ஆகும். ஸ்ட்ரைக் ரேட் 69.19 வைத்துள்ளார். 13 சதங்கள் மற்றும் 9 அரைசதங்களைக் குவித்துள்ளார்.
சார்பிராஸ் கான் பள்ளியில் படிக்கும் போதே தனது முதல் ஹாரிஸ் ஷீல்ட் டோர்னமென்டில் 439 ரன்களைக் குவித்து 21 ஆண்டுகள் பழமையான சச்சின் தெண்டுல்கரின் சாதனையை முறியடித்தவர். மேலும் இருமுறை அண்டர் 19 உலகக் கோப்பையில் விளையாடி, அதிக ரன் குவித்தவர் பட்டியலில் ஒருவராக இருந்துள்ளார்.
இவர் 2015 ஐபில்லில் ஆர்சிபி அணிக்குக் களமிறங்கி, இளம் வயதில் ஐபில் விளையாடிய வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இவர் கடந்த மூன்று ஆண்டுகளில் ரஞ்சித் தொடரில் சிறப்பாக விளையாடி அதிக ரன்கள் அடித்துள்ளார்.
2019-20 ரஞ்சித் தொடரில், 928 ரன்கள் குவித்து 154 ஆவரேஜ் வைத்துள்ளார்.
2021-22ல் 982 ரன்களுடன் 122 ஆவரேஜும், 2022-23ல் 556 ரன்களுடன் 90 ஆவரேஜும் வைத்துள்ளார். இவருக்கு சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் கிடைக்கவில்லை. இதுகுறித்து பல இந்திய முன்னாள் வீரர்கள் பிசிசிஐயைக் கடுமையாக விமர்சித்துள்ளனர். கவாஸ்கர் மற்றும் அஸ்வின் ஆகியோர் இவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருந்தனர்.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணி டி20 ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் பங்கேற்கிறது. தற்போது சர்பராஸ் கானும் தென்னாப்பிரிக்கா சென்றுள்ளார். ஆனால் அவர் அங்கு சென்றிருப்பது, தென் ஆப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான இரண்டு நான்கு நாள் போட்டிகளில் விளையாடுவதற்கு ஆகும். இதில் இந்தியா ஏ அணியின் முக்கிய வீரராக சர்ப்ராஸ்கான் இருக்கிறார்.
சர்பாஸ்கான் முதல் போட்டியில் விளையாடுவார். ஆனால் இரண்டாவது போட்டியில் விளையாடுவாரா இல்லையா என்பது இந்தியா ஏ அணியின் கேப்டன் கேஎஸ் பரத் கைகளில்தான் இருக்கும். எனினும் இப்போட்டி அவருக்கு அவர்தன் திறமையை வெளிப்படுத்த மிகவும் உதவியாக இருக்கும்.
சர்பிராஸ் கான் இனி வரும் காலங்களில் தன் அட்டவணையைத் தயார்படுத்தி இந்திய அணிக்குத் திரும்பக் கடுமையாக உழைப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.