தனது பேட்டின் மூலம் தேர்வாளர்களுக்கு மரண அடி கொடுத்த சர்பராஸ்!- வீடியோ இணைப்பு!

0
268

வருகின்ற பிப்ரவரி மாதம் நான்கு போட்டிகளைக் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபியில் விளையாடுவதற்காக இந்தியா வருகிறது ஆஸ்திரேலியா அணி . இந்த இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியை பிப்ரவரி மாதம் ஒன்பதாம் தேதி நாக்பூரில் தொடங்க இருக்கிறது .

இந்தத் தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியானது அறிவிக்கப்பட்டது . இந்த அணியில் இசான் கிசான் மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர் . ரிஷப் பண்ட் அணியில் இல்லாததால் அவருக்கு மாற்று வீரராக இசான் கிசான் முதன்முதலாக இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்று இருக்கிறார் . மேலும் டி20 போட்டிகளில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சூரியகுமார் யாதவும் இந்திய அணியில் இடம் பெற்று இருக்கிறார்.

கடந்த இரண்டு சீசன்களாக ரஞ்சிப் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் மும்பை அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சர்பராஸ் கான் இந்த அணியில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் துரதிஷ்டவசமாக அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை . பங்களாதேஷ் அணியுடன் டெஸ்ட் தொடரின் போது அவர் அணியில் இடம் பெறுவார் என இந்திய அணியின் தேர்வு குழு தலைவர் சேட்டன் சர்மா அறிவித்திருந்தார். ஆனால் அவர் பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரிலும் இடம்பெறவில்லை . தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் சர்பராஸ் கானுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை .

இதுவரை 33 முதல் தரப் போட்டிகளில் ஆடி உள்ள சர்பராஸ் கான் 3505 ரன்கள் எடுத்திருக்கிறார், இதில் 13 சதங்களும் ஒன்பது அரை சதங்களும் அடங்கும் . இவரது சராசரி 80.47 ஆகும் . முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் டான் பிராட் மேனுக்கு அடுத்தபடியாக அதிக சராசரி வைத்துள்ள வீரர் இவர்தான் . கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் ரஞ்சி கோப்பையில் 900 ரண்களுக்கு மேல் எடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வருட ரஞ்சி சீசனிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் சர்ப்பராஸ் .

இந்நிலையில் டெல்லி அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற போட்டியில் மும்பை அணிக்காக ஆடிய சர்பராஸ் கான் மும்பை அணி இக்கட்டான சூழ்நிலையில் தவித்துக் கொண்டிருந்த போது தனி ஆளாக நின்று போராடி மும்பை அணியை சரிவிலிருந்து மீட்ட இவர் இந்தப் போட்டியிலும் அபாரமாக ஆடி மீண்டும் ஒரு சதத்தினை பதிவு செய்தார் . சிறப்பாக ஆடிய சர்பராஸ் கான் 125 ரன்கள் எடுத்து அவுட் ஆனார் . இவரது சிறப்பான ஆட்டத்தால் மும்பை அணி 293 ரன்கள் எட்டியது . சர்பராஸ் கான் தன்னுடைய சதத்தை ஆக்ரோஷமாக கொண்டாடும் வீடியோவும் இணைக்கப்பட்டுள்ளது .