இந்திய கிரிக்கெட்

பிரச்சினை இருப்பது உண்மை.. அடுத்த டெஸ்ட்க்கு கில் வந்தா.. 2 பேர்ல அவர் வெளிய போவாரு – இந்திய உதவி கோச் மறைமுக தகவல்

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புனேவில் நாளை மறுநாள் நடைபெற இருக்கிறது. இதற்காக இந்திய அணி மிகத் தீவிரமாக தயாராகி வருகிறது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் உதவி பயிற்சியாளர் ரியான் டெஸ்கோத்தே கே எல் ராகுல் மற்றும் சர்பராஸ் கான் அடுத்த டெஸ்டில் இடம்பெறுவது குறித்த சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

இரண்டாவது போட்டிக்கு தயாராகும் கில்

முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கழுத்தில் ஏற்பட்ட சிறிய பிரச்சினையின் காரணமாக இந்திய அணியின் இளம் வீரர் சுப்மான் கில் முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகினார். இந்த சூழ்நிலையில் சமீபத்திய டெஸ்ட் தொடர்களில் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் சர்ப்ராஸ் கான் மற்றும் முன்னணி வீரரான கேஎல் ராகுல் ஆகியோருக்கு பிளேயிங் லெவன் அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது.

பெங்களூரில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி வீரர்கள் அனைவரும் குறைந்த ரன்களில் ஆட்டம் இழந்தாலும், இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமாக விளையாடிய சர்ப்ராஸ்கான் 150 ரன்கள் குவித்து இந்திய அணி ஓரளவு முன்னிலை பெறுவதற்கு மிகப்பெரிய துருப்புச் சீட்டாக அமைந்தார். இருப்பினும் இரண்டாவது இன்னிங்ஸில் முன்னணி வீரரான கேஎல் ராகுல் 16 பந்துகளில் 12 ரன்கள் மட்டுமே எதிர்கொண்டு வெளியேறினார். இந்த சூழ்நிலையில் கில் இரண்டாவது போட்டிக்கு வர தயாராக இருக்கும் நிலையில் சர்பராஸ் கான் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோரில் ஒருவர் இடத்திற்கு பிரச்சனை ஏற்படும் என்று இந்திய அணியின் உதவி பயிற்சியாளர் கூறியிருக்கிறார்.

- Advertisement -

போட்டி இருப்பது உண்மைதான்

இதுகுறித்து ரியான் டெஸ்கோத்தே விரிவாக கூறும்போது “சர்ப்ராஸ் கான் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோரின் இடத்திற்கு பிரச்சனை இருப்பது உண்மைதான். முதல் டெஸ்ட் போட்டியில் சர்ப்ராஸ்கான் புத்திசாலித்தனமாக விளையாடினார். முதல் போட்டி முடிந்த பிறகு நான் கே.எல். ராகுலிடம் சென்று எத்தனை பந்துகளை தவற விட்டீர்கள் என்ற விதத்தில் கேட்டேன். கே எல் ராகுல் நல்ல மனநிலையில்தான் இருக்கிறார். ஆனால் நாங்கள் முதல் ஏழு இடங்களுக்கும் சரியான நபர்களை பொருத்த வேண்டும்.

இதையும் படிங்க:சிராஜ் உடனடியா இதை மட்டும் செய்யுங்க.. மீதிய வழக்கம் போல ரோகித் பார்த்துப்பார் – முகமத் ஷமி அறிவுரை

எனவே போட்டி இருப்பது உண்மைதான்” என்று கூறியிருக்கிறார். அதாவது ஏழு நபர்களை சரியாக பொருத்த வேண்டும் என்றால் கே.எல் ராகுல் அடுத்த போட்டியில் இடம்பெற மாட்டார் என்று உதவி பயிற்சியாளர் மறைமுகமாக கூறி இருப்பது இதன் மூலம் தெரிய வருகிறது. எனவே அடுத்த போட்டிக்கு கில் களம் இறங்கினால் கே எல் ராகுல் வெளியேறுவார் என்று மறைமுகமாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts