சர்பராஸ் கான் தந்தை வைத்த கோரிக்கை.. நெகிழ வைத்த ரோகித் சர்மா – களத்தில் என்ன நடந்தது

0
495
Rohit

உள்நாட்டு கிரிக்கெட்டில் கடைசி 3 ரஞ்சி சீசன்களில் சர்பராஸ் கான் மொத்தம் பத்து சதங்கள் மற்றும் ஐந்து அரைசதங்கள் அளித்திருக்கிறார். இதில் அதிகபட்சமாக முச்சதம் மற்றும் இரட்டை சதங்கள் இருக்கின்றன.

ஒட்டுமொத்தமாக ரன் சராசரியை எடுத்துக் கொண்டால் மூன்று சீசன்களில் 100 தாண்டுகிறது. நடுவில் எவ்வளவு ஏமாற்றங்கள் வந்த பொழுதும் அதை தாங்கிக் கொண்டு, இவ்வளவு தூரம் அவர் ரன்கள் குவித்திருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தன்னுடைய பயிற்சியில் இளம் வீரர்களுக்கு அவர் எப்பொழுதுமே, இந்திய அணியின் கதவை தட்டக்கூடாது சிறப்பான செயல்பாட்டின் மூலமாக உடைத்து எறிய வேண்டும் என்பார்.

சர்பராஸ் கான் ராகுல் டிராவிட்டின் அந்த வார்த்தையை அப்படியே பின்பற்றி, டன் கணக்கில் ரன்கள் குவித்து, இந்திய அணியின் கதவுகளை தட்டுவதற்கு பதிலாக உடைத்தெறிந்து உள்ளே வந்திருக்கிறார்.

இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படுவதற்கு முன்பாக, இந்தியா வந்து மூன்று அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக 160 பந்துகளில் 161 ரன்கள் குவித்திருந்தார். இப்படி இந்திய அணிக்கு கடைசியாக தேர்வாவதற்கு முன்பும் கூட இந்திய ஏ அணிக்காக ஒரு சதம் அடித்திருக்கிறார்.

- Advertisement -

சர்ப்ராஸ் கானுக்கு அவருடைய தந்தை நௌஷாத் கான்தான் பயிற்சியாளர். பயிற்சியாளர் என்பது மட்டும் இல்லாமல், மனரீதியாக மகனை எப்படி நம்பிக்கையாக வைத்திருப்பது என்பதிலும், சிறந்த வாழ்க்கை வழிகாட்டியாகவும் அவருக்கு இருந்திருக்கிறார்.

இன்று தன் மகனுக்கு இந்திய அணியின் டெஸ்ட் தொப்பி கிடைத்ததும், அந்த தொப்பியை சர்பராஸ் கான் கொண்டு வந்து கொடுத்ததும், நௌஷாத் கான் கண்ணீர் விட்டு அழுதார். அந்தக் காட்சி மைதானத்தில் மிகவும் உணர்வு பூர்வமாக அமைந்தது.

இதையும் படிங்க : “தம்பி சர்பராஸ் நல்லா விளையாடின.. தப்பு என் மேலதான்” – ஜடேஜா சோகமான பதிவு

இன்று கேப்டன் ரோஹித் சர்மாவிடம் சர்பராஸ் கான் தந்தை பேசும்பொழுது “ப்ளீஸ் சர்பராஸ் கானை கொஞ்சம் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று மிகவும் பணிவாக கேட்க, அதற்கு ரோகித் சர்மா கேப்டனாக இல்லாமல், சக மனிதராக உடனே “சார் நிச்சயமாக பார்த்துக் கொள்கிறேன்” என்று பதில் சொல்லியதோடு, சர்பராஸ்கான் மனைவியிடமும் தன்னை அறிமுகப்படுத்தி இரண்டு வார்த்தைகள் பேசிவிட்டு சென்றார். கேப்டன் ரோஹித் சர்மாவின் செயலும் மிகவும் நெகிழ வைப்பதாக இருந்தது.