ரோகித் பாய் கேப்டன் இல்ல வித்தியாசமானவர்.. அவர் அந்த படத்து ஹீரோ மாதிரி – சர்பராஸ் கான் பேட்டி

0
85
Sarfaraz

இந்திய டெஸ்ட் அணியின் இளம் வீர சர்பராஸ் கான் தங்கள் கேப்டன் ரோகித் சர்மா தங்களுக்கு மூத்த சகோதரர் போல எனவும், கேப்டன் போல இல்லாமல் ஒரு படத்தின் கதாநாயகன் போல செயல்பட கூடியவர் எனவும் கூறியிருக்கிறார்.

இந்த ஆண்டு உள்நாட்டில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை சர்பராஸ் கான் பெற்றார். மொத்தம் மூன்று போட்டிகளில் ஐந்து இன்னிங்ஸ்கள் விளையாடி மூன்று அரை சதங்கள் உடன் 200 ரன்கள் எடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

உள்நாட்டு கிரிக்கெட் சூறாவளி

கடந்த மூன்று ஆண்டுகளில் சர்பராஸ் கான் எதையும் மிச்சம் வைக்காமல் முச்சதம் வரை உள்நாட்டு கிரிக்கெட்டில் சிவப்பு பந்து வடிவத்தில் நொறுக்கி தள்ளி இருந்தார். அவருக்கு கடந்த ஆண்டுகளிலேயே இந்திய அணிகள் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்து ஏமாற்றமே மிஞ்சி இருந்தது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மூத்த வீரர்களான விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா மற்றும் கே.எல் ராகுல் ஆகியோர் விளையாட முடியாமல் போனது சர்பராஸ் கான் இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமாவதற்கு மிகவும் உதவியாக அமைந்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி மூன்று டெஸ்டில் மூன்று அரை சதங்கள் அடித்து தனது இடத்தை உறுதியாக்கி இருக்கிறார். மேலும் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் அணியில் இடம் பெற்று இருக்கிறார்.

- Advertisement -

ரோகித் சர்மா மூத்த சகோதரர்

இந்த நிலையில் தன்னுடைய கேப்டன் ரோகித் சர்மா பற்றி பேசி இருக்கும் சர்பராஸ் கான் கூறும் பொழுது “ரோகித் பாய் மிகவும் வித்தியாசமானவர். அவர் உங்களை மிகவும் வசதியாக உணர வைக்கக் கூடியவர். அவர் எங்களுக்கு ஒரு பெரிய சகோதரர் போல. அவர் தலைமையின் கீழ் விளையாடும் பொழுது நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்போம்.

இதையும் படிங்க : கேஎல் ராகுல இனி அப்படிப்பட்டவர் கிடையாது.. அவர தப்பா யூஸ் பண்றத நிறுத்திக்கணும் – தினேஷ் கார்த்திக் அறிவுரை

நான் அவரை வெளியில் இருந்து பார்த்தேன். தற்போது அவருடன் இணைந்து விளையாடி அதை அனுபவித்து வருகிறேன். எங்களை அவர் ஜூனியர் போன்று நடத்துவது கிடையாது. எல்லோரையும் போல சமமாக நடத்துகிறார். லகான் படம் எனக்கு மிகவும் பிடித்த படம். அந்தப் படத்தில் அமீர்கான் ஒரு அணியை எப்படி உருவாக்குவாரோ,அப்படித்தான் ரோகித் பாயும் இருக்கிறார். என் பார்வையில் லகான் படத்தின் அமீர்கான் கேரக்டர்தான் ரோகித் பாய்” என்று கூறி இருக்கிறார்

- Advertisement -