கேஎல் ராகுல இனி அப்படிப்பட்டவர் கிடையாது.. அவர தப்பா யூஸ் பண்றத நிறுத்திக்கணும் – தினேஷ் கார்த்திக் அறிவுரை

0
18
Rahul

இந்திய அணி அடுத்த தொடர்ச்சியாக 10 டெஸ்ட் போட்டிகளில் 2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் வாரம் வரையில் விளையாட இருக்கிறது. இந்த நிலையில் கேஎல்.ராகுலை முன்வைத்து தினேஷ் கார்த்திக் இந்திய கிரிக்கெட் நிர்வாகத்திற்கு ஒரு எச்சரிக்கை செய்திருக்கிறார்.

கடந்த 40 நாட்களுக்கு மேல் இந்திய அணி ஓய்வில் இருந்து வருகிறது. இந்த நிலையில் அடுத்த வாரம் செப்டம்பர் 19ஆம் தேதி பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுகிறது. இங்கிருந்து மொத்தம் பத்து டெஸ்ட் போட்டிகளை இந்திய அணி விளையாட இருக்கிறது.

- Advertisement -

கேஎல்.ராகுலின் சோகமான கிரிக்கெட் கேரியர்

இந்திய கிரிக்கெட்டில் தற்காலத்தில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு அடுத்து உலகத்தரமான பேட்ஸ்மேனாக கே எல்.ராகுல் பார்க்கப்படுகிறார். ஆனால் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் அவருக்கு இந்திய அணியில் இதுவரையில் நிரந்தர இடம் என்பது உறுதியாக இருந்தது கிடையாது. அவரது செயல்பாடுகள் எப்பொழுது மாறும் என்று அவருக்கே தெரியாது.

மேலும் கேஎல்.ராகுல் இந்திய கிரிக்கெட்டில் காயத்தால் பாதிக்கப்பட்ட மிகவும் துரதிஷ்டமான வீரராக இருக்கிறார். கிரிக்கெட் வாழ்க்கையின் துவக்கத்திலிருந்து காயங்கள் அவரை விடாமல் துரத்தி வந்திருக்கிறது. இதன் காரணமாக அவர் எப்பொழுது ஒரு தொடரில் விளையாடுவார் விலகுவார்? என்பது நிச்சயமற்றதாக இருக்கிறது. அதே சமயத்தில் அவருடைய விக்கெட் கீப்பிங் சமீப காலத்தில் மிகச்சிறப்பாக மாறியிருக்கிறது.

- Advertisement -

கேஎல்.ராகுலுக்கு சுமையை கூட்டாதிங்க

கேஎல்.ராகுல் விக்கெட் கீப்பிங் பற்றி பேசி இருக்கும் தினேஷ் கார்த்திக் கூறும் பொழுது “விக்கெட் கீப்பிங் செய்வதில் கே எல் ராகுல் தற்பொழுது மிகவும் முன்னேறி இருக்கிறார். அவர் இப்பொழுது சிறந்த விக்கெட் கீப்பர். இனி அவரை ஒரு பகுதி நேர விக்கெட் கீப்பர் என்று கூறுவது சரியாக இருக்காது. எனவே இனி அவரை அப்படி சொல்லக்கூடாது. அதே சமயத்தில் அவர் காயங்களுடன் போராடிக் கொண்டிருப்பவர் என்பதால் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஐந்து நாட்கள் அவரால் விக்கெட் கீப்பிங் செய்ய முடியாது.

இதையும் படிங்க : ஐபிஎல் ஒரே டீம்ல ஆடிட்டு.. ஜோ ரூட் எனக்கு அப்படி பண்ணினத தாங்க முடியல – துருவ் ஜுரல் ஓபன் பேட்டி

அவருடைய கிரிக்கெட் பயணத்தில் அவர் தன்னுடைய முதுகை கவனித்துக் கொள்ள வேண்டும். எனவே அவருக்கு விக்கெட் கீப்பிங் ஸ்லாட் கொடுப்பது சரியாக இருக்காது. இருந்தபோதிலும் கூட இந்த சீசனில் அவர் வெற்றி பெறுவார் என்று நான் நம்புகிறேன்” எனக் கூறியிருக்கிறார்.

- Advertisement -