இந்திய இளம் வீரர் சப்ராஸ் கான் இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் இடம் பிடிப்பதற்காக சச்சின் டெண்டுல்கர் மற்றும் சுனில் கவாஸ்கர் வழியில் செல்ல இருப்பதாக கூறியிருக்கிறார்.
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பாக சில டெஸ்ட் தொடர்களில் சர்ப்ராஸ் கானுக்கு இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அவர் முழுவதுமாக அணியில் இருந்து கழட்டி விடப்பட்டார். அதே சமயத்தில் இங்கிலாந்து ஏ அணிக்கு எதிராக இங்கிலாந்தில் ஒரு இன்னிங்ஸ் விளையாடி 92 ரன் எடுத்திருந்தார்.
மும்பையில் ஆண்டுதோறும் நடத்தப்படும் கங்கா கிரிக்கெட் தொடர் அங்கு மழைக்காலத்தில் நடத்தப்படுகிறது. மேலும் ஆடுகளம் எப்பொழுதும் கொஞ்சம் ஈரமாகவே இருக்கும். இதன் காரணமாக அங்கு ரன்கள் எடுப்பது மிகவும் கடினம். இந்த தொடரில் விளையாடினால் தங்கள் புள்ளி விவரங்களுக்கு ஆபத்து என பேட்ஸ்மேன்கள் பலர் விளையாடுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து சர்பராஸ் கான் பேசும்பொழுது ” எனது குழந்தை பருவத்தில் சுனில் கவாஸ்கர் சார் இங்கிலாந்தில் இருந்து திரும்பியதும் காலை உடனே கங்கா தொடரில் விளையாடியதை என்னுடைய பயிற்சியாளர் நவ்ஷாத் கான் சொல்லி நான் கேட்டிருக்கிறேன். நானும் என் தம்பியும் இந்த தொடரில் விளையாடுவதை பெருமையாக நினைக்கிறோம். காலையில் மழை பெய்யாது என்று நினைத்தோம் பெய்தது. இப்போது வானிலை பரவாயில்லை. கங்கா தொடர் புத்தகத்தை புரட்டியபோது 3 ஆண்டுகளுக்கு முன் நான் சதம் அடித்தது இருந்தது. இது எனக்கு நல்ல நினைவை கொடுக்கிறது”
“மும்பை வீரர்கள் அனைவரும் கங்கா தொடரில் விளையாட வேண்டும். சில வீரர்கள் பேட்டிங் செய்வதற்கு கடினமான இந்த தொடரில் தோல்வி அடைந்தால் தங்களது எதிர்காலம் பாதிக்கப்படும் என்று பயப்படுகிறார்கள். ஆனால் சச்சின் மற்றும் கவாஸ்கர் இதேபோல நினைத்திருந்தால் அவர்கள் பெரிய ஜாம்பவான்களாக மாறியிருக்க முடியாது”
இதையும் படிங்க : ஷமி இனி அவ்வளவுதானா.. கம்பீர் அணியில் எப்போதும் வாய்ப்பே கிடைக்காதா? – வெளியான ஆச்சரிய தகவல்கள்
“இந்தத் தொடரில் மும்பையின் பெரிய வீரர்கள் விளையாடினால் அது இளம் வீரர்களுக்கு நல்ல உத்வேகமாக இருக்கும். இந்த தொடரில் உங்களால் விளையாடி வெற்றி பெற முடியும் என்றால் நீங்கள் உலகில் எங்கு விளையாடினாலும் வெற்றி பெற முடியும்” என்று கூறியிருக்கிறார்.