இந்திய டெஸ்ட் அணிக்கு நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி திரும்பி வருவதற்கான வாய்ப்புகள் எவ்வாறு உள்ளது என்பது குறித்து இந்திய தேர்வுக்குழு அதிகாரி தெரிவித்திருக்கிறார்.
தற்போது இந்திய டெஸ்ட் வேகப்பந்து பவுலிங் யூனிட் பலவீனமாக காணப்படுகிறது. பும்ரா காயம் ஏற்படுவதற்கான வாய்ப்பில் இருப்பதால் நிரந்தரமற்றவராக இருக்கிறார். தற்போதைக்கு முகமது சிராஜ் மட்டுமே நம்பிக்கை தருகிறார். இந்த நிலையில் முகமது ஷமி இல்லாதது பின்னடைவாக இருக்கிறது.
பிசிசிஐ முடிவு
தற்போது இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் தேர்வுக்குழு இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்திற்காக வயது குறைந்த திறமையான வேகப்பந்துவீச்சாளர்களை கண்டறிவதற்கு முன்னுரிமை கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக முகமது ஷமி போன்று 30 வயதை தாண்டியவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதை விரும்பவில்லை என்று சொல்லப்படுகிறது. அதே சமயத்தில் அவர் உடல் தகுதியில் தன்னை நிரூபித்து விட்டால் அடுத்து வரும் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கு தேர்வு செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது.
ஷமிக்கான வாய்ப்பு
இதுகுறித்து தேர்வுக்குழு அதிகாரி ஒருவர் தெரிவிக்கும் பொழுது “முதலில் ஷமியை பார்ம் காரணமாக நீக்கவில்லை. அவருடைய உடல் தகுதிதான் பிரச்சனையாக இருக்கிறது. அவரால் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தேவையான அளவுக்கு செயல்பட முடியும் என்றால் அவரை தேர்வு செய்வதில் எந்தவித பிரச்சனையும் இல்லை”
இதையும் படிங்க : கில் கம்பீர் சூழ்ச்சிக்கு பிசிசிஐ அடிபணிய கூடாது.. அடுத்த தொடர்களில் இதை செய்யணும் – முன்னாள் தேர்வுக்குழு தலைவர் பேச்சு
“மேலும் நடைபெற இருக்கும் துலீப் டிராபியில் அவர் கிழக்கு மண்டலத்திற்காக வடக்கு மண்டலத்திற்கு எதிராக விளையாடுகிறார். அவர் எவ்வாறு செயல்படுகிறார் எனவும், மேலும் அவர்களது அணி கால்இறுதியை தாண்டி செல்லும் பொழுது அதிக சுமையை எவ்வாறு சமாளிக்கிறார் என்றும் பார்க்க வேண்டும். இதில் அவர் வெற்றி பெறுவார் என்றால் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு தேர்வு செய்யப்படுவார்” என்று கூறியிருக்கிறார்.






