டான் பிராட்மேன் மாதிரி ஆடிட்டுவர நான் உங்க கண்ணுக்கு தெரியலையா? – பிசிசிஐ-க்கு மறைமுக செய்தி அனுப்பிய சர்ப்ராஸ் கான்!

0
808

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் தன்னை தேர்வு செய்யாததற்கு இன்ஸ்டாகிராமில் மறைமுகமாக ஸ்டோரி வைத்திருக்கிறார் சர்ப்ராஸ் கான்.

புதிதாக நியமிக்கப்பட்ட சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வுக்குழு நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர் மற்றும் அதைத்தொடர்ந்து நடைபெறவிருக்கும் ஆசிரியர் அணியுடனான டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணியை தேர்வு செய்தது.

- Advertisement -

காயம் காரணமாக சஞ்சு சாம்சன் டி20 போட்டிகளில் இருந்து விலகி இருக்கிறார். முன்பு கூறியது போல, சீனியர் வீரர்களுக்கு இடம் கொடுக்கவில்லை. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக பிரித்வி ஷா டி20 அணியில் இடம்பெற்று இருக்கிறார்.

ஆஸ்திரேலியாவுடன் நடக்கவுள்ள முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் ரிஷப் பன்ட் இடத்திற்கு இஷான் கிஷன் மற்றும் சூரியகுமார் யாதவ் இரண்டு பேரும் அறிவிக்கப்பட்டிருக்கின்றனர். ‘சூரியகுமார் யாதவை தேர்வு செய்ததில் மகிழ்ச்சி. ஏனெனில் அவர் சிறந்த பார்மில் இருக்கிறார்.’ என்று பலரும் கூறி வருகின்றனர்.

அதேநேரம் சர்ப்ராஸ் கான் ரஞ்சிக்கோப்பையில் நன்றாக செயல்பட்டும், அபாரமான பார்மில் இருந்தும் தேர்வு செய்யப்படாதது பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில் தொடர்ச்சியாக ஒவ்வொரு சீசனிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். கடந்த 2021-22 ரஞ்சிக் கோப்பை சீசனில் கிட்டத்தட்ட ஆயிரம் ரன்கள் அடித்தார். அதில் ஆறு சதங்கள் அடங்கும்.

- Advertisement -

அதேபோல் இப்போது இருக்கும் சீசனிலும் 450 ரன்களுக்கும் மேல் அடித்திருக்கிறார். ஒவ்வொரு சீசனிலும் இப்படி அபாரமாக செயல்பட்டு வரும் இவரை எடுக்காதது அதிர்ச்சியாக இருந்தாலும், தன்னை தேர்வு செய்யாதது குறித்து இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி வைத்திருக்கிறார் சர்ப்ராஸ் கான்.

அதாவது, ஆஸ்திரேலியா அணியின் ஜாம்பவான் எந்த அளவிற்கு சராசரி வைத்திருக்கிறாரோ, கிட்டதட்ட அதற்கு நிகராக நானும் வைத்திருக்கிறேன் என்கிற புள்ளிவிவரங்களை பதிவிட்டு அவர் ஸ்டோரில் வைத்திருந்தார். இது மறைமுகமாக பிசிசிஐக்கு, “நான் உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா?” என கேள்வி எழுப்பியது போல இருந்தது.

- Advertisement -