கிரிக்கெட் கமெண்ட்ரியில் சர்பராஸ் கான் அப்பா.. ஆகாஷ் சோப்ரா கேள்விக்கு மாஸ் பதில்

0
263
Sarfaraz

இந்திய கிரிக்கெட்டில் சர்பராஸ் கான் மிகவும் ஆச்சரியமான ஒரு வீரர். இளம் வயதிலேயே பலரது கவனத்தையும் ஈர்க்கும் பெரிய சாதனைகளை முறியடித்தவர்.

இதற்கு அடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் விராட் கோலி ஏபி டிவில்லியர்ஸ் போன்ற பெரிய ஜாம்பவான்கள் இருந்த பொழுது, மாடர்ன் கிரிக்கெட் ஷாட்கள் விளையாடி, வெள்ளை பந்து கிரிக்கெட்டில் இந்தியாவின் அடுத்த எதிர்காலம் என்று பலர் பார்த்த வீரர்.

- Advertisement -

ஆனால் அங்கிருந்து அப்படியே திரும்பி சிவப்பு பந்து கிரிக்கெட்டில் தன்னை மேலும் மேலும் மெருகேற்றிக் கொண்டு, உள்நாட்டு கிரிக்கெட்டில் ரஞ்சி தொடரில் மும்பை மாநில அணிக்காக தன் கணக்கில் ரன்களை குவித்திருக்கிறார்.

உதாரணமாக கடந்த மூன்று ரஞ்சி சீசன்களில் மும்பை அணிக்காக 27 போட்டிகளில் விளையாடி 10 சதங்கள், 5 அரைசதங்கள் எடுத்திருக்கிறார். இதில் முச்சதம் இரட்டைச் சதம் என எல்லாமே அடக்கம். ஒட்டுமொத்த சராசரியை எடுத்துக் கொண்டால் 100 தாண்டுகிறது.

இந்த நிலையில் கடந்த வருடத்திலேயே பங்களாதேஷ் டெஸ்ட் சுற்றுப்பயணத்தில் வாய்ப்பு கிடைக்கும் என பரவலாக எதிர்பார்ப்பு இருந்தது. அதற்குப் பிறகு வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ட
பிசிசிஐ அவர் களத்தில் காட்டும் ஆக்ரோஷத்தை குறைத்து இன்னும் ஒழுக்கமாக விளையாட வேண்டும் என்று கூறியது.

- Advertisement -

இந்த நிலையில்தான் ரகானே, புஜாரா ஆகியோர் நீக்கப்பட்டு, விராட் கோலி மற்றும் கேஎல்.ராகுல் ஆகியோர் விளையாடாத நிலையில், சர்பராஸ் கானுக்கு இந்திய அணியில் முதல் வாய்ப்பு கிடைத்தது.

மேலும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் கேஎல்.ராகுல் காயம் காரணமாக விலகிக் கொள்ள இன்று இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமாகும் வாய்ப்பும் சர்பராஸ் கான் பெற்றிருக்கிறார்.

இவரது வளர்ச்சியின் பின்னால் இவரது தந்தையின் கடுமையான உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு இருக்கிறது. இன்று அவர் இந்திய அணியில் டெஸ்ட் விளையாடுவதற்கான தொப்பியை பெற்ற பொழுது, அவருடைய தாய் மற்றும் தந்தை கண்கலங்கி நின்றது எல்லோரையும் நெகிழ்வடைய வைப்பதாக இருந்தது.

மேலும் சர்பராஸ் கான் தந்தையை கிரிக்கெட் கமெண்ட்ரிக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு அவரிடம் ஆகாஷ் சோப்ரா “உங்கள் மகன் சர்ப்ராஸ் கான் அறிமுகத்திற்காக நீண்ட காலம் காத்திருந்தீர்களா? என்று கேட்டார்.

இதையும் படிங்க : தம்பி 3வது டெஸ்டில் இடமில்லை.. போய் ரஞ்சி விளையாடுங்க.. உடனுக்குடன் பிசிசிஐ அதிரடி

இதற்கு பதில் அளித்த சர்பராஸ் கான் தந்தை நவ்ஷாத் கான் ” இரவுகடக்க கொஞ்சம் நேரம் எடுக்கும். ஆனால் சூரியன் உதிக்காமல் போகாது. இது நான் காத்திருந்த சூரியன் உதிக்கும் நேரம்” என அருமையான பதிலை கூறியிருக்கிறார்.