இந்திய முன்னாள் வீரர்களும் அரசியல் செய்கிறார்கள்.. புத்தி இல்லாமல் பேசுகிறார்கள் – சக்லைன் முஸ்டாக் குற்றச்சாட்டு

0
5
Saqlain

பாகிஸ்தான் முன்னாள் வீர சக்லைன் முஸ்டாக் இனி இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் நட்புடன் நடந்து கொள்ள வாய்ப்பே இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும் அவர் இந்திய அரசியல்வாதிகள் மட்டும் இல்லாமல் முன்னாள் இந்திய வீரர்களும் அரசியல் செய்ய ஆரம்பித்து விட்டார்கள் என்றும், அவர்களும் தொடர்ந்து வெறுப்பை விதைத்துக் கொண்டு வருகிறார்கள் என்றும் குற்றம் சாட்டி இருக்கிறார்.

- Advertisement -

இனி நட்புக்கு வாய்ப்பில்லை

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிராக விளையாடுவோம் என இன்று பாகிஸ்தான் அரசாங்கம் அறிவித்திருக்கிறது. இந்த நிலையில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் வருகின்ற பிப்ரவரி 15ஆம் தேதி கொழும்பு மைதானத்தில் விளையாட இருக்கின்றன.

இந்த நிலையில் இது குறித்து சக்லைன் முஸ்டாக் பேசும்பொழுது “தற்போது விளையாட்டு மிகவும் மோசமாகி விட்ட காரணத்தினால் மீண்டும் பழைய நட்புறவு வரும் என்று நான் நினைக்கவில்லை. அதே சமயத்தில் இந்திய பக்கத்தில் இந்த உறவை விரும்பவும் இல்லை. அவர்கள் தங்கள் அரசியலைத் தொடர்ந்து பலமாக செய்வதற்கு இந்த நிலையை இப்படியே வைத்திருக்க நினைக்கிறார்கள். மேலும் தொடர்ந்து இப்படியேதான் நடந்து கொள்வார்கள்”

- Advertisement -

முன்னாள் வீரர்கள் மோசம்

“அரசியல்வாதிகள் தங்களுடைய அரசியலுக்காக இப்படி எல்லாம் நடந்து கொள்கிறார்கள். ஆனால் முன்னாள் வீரர்களான நீங்கள் இப்படி எல்லாம் பேசிக் கொண்டிருக்கக் கூடாது என்பது உங்களுக்கு புரியவில்லையா? நீங்கள் ஒரு விக்கெட் எடுக்கும்போதோ அல்லது பௌண்டரி அடைக்கும் போது இரண்டு பக்கத்தில் இருந்தும் கைகளை தட்டுகிறார்களே அது உங்களுக்கு கேட்கவில்லையா?”

இதையும் படிங்க : நேத்து நைட் அர்ஷ்தீப் பவுலிங் பார்த்து மிரண்டுட்டேன்.. புதுசா ஒன்னு கொண்டு வந்து இருக்காரு – ரிக்கி பாண்டிங் கண்டுபிடிப்பு

“எல்லைக்கு அந்த பக்கத்தில் இருந்து இன்னும் கொஞ்சம் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் உள்ள பெரிய முன்னாள் வீரர்கள் கூட மோசமாக பேசி வெறுப்பை பரப்புகிறார்கள். அவர்கள் இந்த விளையாட்டின் நோக்கத்தை கொஞ்சம் கூட புரிந்து கொள்ளவே இல்லை. கிரிக்கெட் அமைதி மற்றும் ஒற்றுமைக்கான செய்தியை வழங்கும் விளையாட்டு” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -