இந்திய வீரர்களிடம் ரப்பர் பூசப்பட்ட ஒரு ஸ்பெஷல் பேட் உள்ளத காரணத்தினால் தான் அவர்களால் பெரிய ஷாட் விளையாட முடிகிறது என இலங்கை வீரர் பானுக ராஜபக்சே சர்ச்சையான முறையில் பேசி இருக்கிறார்.
தற்போது இந்தியா மற்றும் இலங்கையில் டி20 உலக கோப்பை தொடர் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இந்த நிலையில் இலங்கையைச் சேர்ந்த இவர் இப்படி பேசி இருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரிய சர்ச்சையை உண்டு செய்திருக்கிறது.
இந்திய வீரர்கள் அதிரடி
தற்போது டி20 கிரிக்கெட் வடிவத்தில் எந்த சர்வதேச அணிகளும் விளையாடாத அளவுக்கு தொடர்ச்சியாக அதிரடியாக இந்திய அணி விளையாடி வருகிறது. குறிப்பாக இந்திய வீரர்கள் அபிஷேக் ஷர்மா மற்றும் இசான் கிஷான் போன்றோர் பெரிய ஷாட் முதல் பந்தில் இருந்து விளையாடுகிறார்கள். மேலும் பேட்டில் பந்து பட்டால் தெறிக்கிறது.
இப்படியான அணுகு முறையில் மூலமாக உலக டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கி இருக்கிறது. கிரிக்கெட்டில் மிகப்பெரிய நாடுகளாக பார்க்கப்படும் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் கூட இந்த வடிவத்தில் இந்திய அணியை விட பின்தங்கி இருக்கின்றன.
சர்ச்சை பேச்சு
இது மட்டும் இல்லாமல் இளையோர் கிரிக்கெட்டில் கூட இந்திய அணியின் வைபவ் சூரியவன்சி 14 வயதிலேயே பெரிய சிக்ஸர்கள் அடித்து வருகிறார். மேலும் அண்டர் 19 உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் 15 சிக்ஸர்கள் அடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : இந்திய வீரர்கள் கிட்ட ரப்பர் பூசின ஸ்பெஷல் பேட் இருக்கு.. இதை யாராலும் வாங்க முடியாது – பனுகா ராஜபக்சே சர்ச்சை பேச்சு
இதுகுறித்து பானுக ராஜபக்சே பேசும்பொழுது “இந்திய வீரர்களிடம் உள்ள பேட் நாம் வாங்கும் சிறந்த பேட்டை விட சிறப்பானது. அதில் ஒரு லேயர் ரப்பர் பூசப்பட்டு இருப்பது போல நான் உணர்கிறேன். அது எப்படி சாத்தியம் என்று என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. இது அனைத்து வீரர்களுக்குமே தெரிந்த விஷயம்” என்று கூறியிருக்கிறார்.






