ஆசிய, உலக கோப்பையில் சஞ்சு சாம்சனுக்கு உறுதியான ஆப்பு.. சற்று முன் வெளியான தகவல்!

0
339
Sanjusamson

இந்திய கிரிக்கெட் நிர்வாகம் இந்தியாவில் நடக்க இருக்கின்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான தயாரிப்புகளில் மிகவும் சிரமப்பட்டு வருகிறது. இதற்கு முக்கிய வீரர்களின் காயம் மிக முக்கிய காரணமாக இருக்கிறது!

கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், பும்ரா மற்றும் பிரசித் கிருஷ்ணா, மேலும் தற்பொழுது முகமது சிராஜ் என வீரர்கள் தொடர்ச்சியாக காயம் அடைந்து கொண்டிருப்பது, ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான ஒரு அணியை உருவாக்குவதில் பெரிய சிக்கலை கொடுக்கிறது.

- Advertisement -

தற்பொழுது காயமடைந்த வீரர்களின் பட்டியலில் இருந்து நல்ல விஷயமாக பும்ரா, பிரசித் கிருஷ்ணா ஆகியோர் குணம் அடைந்து வெளியே வந்திருக்கிறார்கள். இவர்கள் இருவரும் அடுத்து அயர்லாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆகஸ்ட் 13ஆம் தேதி விளையாட இருக்கிறார்கள்.

மேலும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான இந்திய அணியை அமைக்க, பேட்டிங் வரிசையில் நான்காம் இடத்திற்கான வீரர், இரண்டாவது விக்கெட் கீப்பர் என இந்த இரண்டு இடங்களுக்கும் தேடுதலை நடத்தியாக வேண்டிய கட்டாயம் இந்திய கிரிக்கெட் நிர்வாகத்திற்கு இருக்கிறது.

இதன் காரணமாகவே இந்திய டி20 அணியில் கூட இஷாந்த் கிஷான், சஞ்சு சாம்சன் என இரண்டு விக்கெட் கீப்பர்களை கொண்டு இந்தியா நிர்வாகம் நேற்று வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக விளையாடியது.

- Advertisement -

இந்த நிலையில் ஆசியக்கோப்பை மற்றும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனாக இடம்பெற கேஎல்.ராகுல் உடல் தகுதி அடைந்து விட்டதாகவும், அவர் ஆசியக் கோப்பைக்கான அணித் தேர்வுக்கு தயாராக இருப்பதாகவும் செய்திகள் வந்திருக்கிறது.

பிசிசிஐ வட்டாரம் கூறியிருப்பதாக டிஓஐ செய்தியில் “பெங்களூருவில் அமைந்துள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் உள்ள பயிற்சியாளர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் ராகுலின் உடல் தகுதி மற்றும் மீட்சியில் முழு திருப்தி அடைந்துள்ளார்கள். அவர் ஆசிய கோப்பைக்கான அணித்தேர்வுக்கு தயாராக இருக்கிறார்!” என்று கூறப்பட்டுள்ளது.

நேற்று வரையில் ஆசிய கோப்பைக்கு கேஎல்.ராகுல் கிடைக்க மாட்டார் என்கின்ற தகவலே பரவி இருந்தது. ஆனால் இன்று நம்பக்கூடிய இடத்தில் இருந்து, அதற்கு நேர் எதிரான செய்தி வந்திருக்கிறது. எனவே இரண்டாவது விக்கெட் கீப்பருக்கான இடத்தில் சஞ்சு சாம்சன் மேற்கொண்டு இந்திய அணியுடன் பயணிப்பது என்பது கடினமாகி இருக்கிறது.