2023 உலக கோப்பையில் இந்திய அணியில் சஞ்சு சம்சனுக்கு இடம் உறுதி? – ரகசியத்தை கண்டுபிடித்த ரசிகர்கள் கொண்டாட்டம்!

0
366
Sanjusamson

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஷாங்கோ நகரில் செப்டம்பர் மாதத்தில் நடைபெற இருக்கிறது. இதுவரை 2010, 2014 ஆம் ஆண்டு இரண்டு முறை மட்டுமே கிரிக்கெட் போட்டி ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சேர்க்கப்பட்டிருக்கிறது.

இந்த இரண்டு முறையும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சார்பில் எந்த அணிகளும் அனுப்பப்படவில்லை. இந்த முறை நடத்தப்பட இருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு இந்திய கிரிக்கெட் வாரிய தரப்பிலிருந்து ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் அணி அனுப்பப்படுகிறது. இதில் ஆண்களுக்கான கிரிக்கெட் தொடர் செப்டம்பர் மாதம் இறுதியில் நடைபெற இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழு ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியை நேற்று அறிவித்தது. வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் இடம் கிடைக்காத ருதுராஜ் இந்த அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இந்த அணியில் விக்கெட் கீப்பர்களாக பஞ்சாப் அணிக்காக விளையாடி வரும் ஜித்தேஷ் சர்மா மற்றும் பிரப்சிம்ரன் சிங் இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். இஷான் கிஷான், சஞ்சு சாம்சன் என்று இந்திய கிரிக்கெட்டின் முன்னணி விக்கெட் கீப்பர்கள் பெயர்கள் எதுவும் இதில் சேர்க்கப்படவில்லை.

தற்பொழுது இதுதான் சஞ்சு சாம்சங் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. இதுவரை அணியில் தேர்வு செய்யப்படாமல் இருந்ததற்கு விமர்சனங்களை செய்து கொண்டிருந்தார்கள். தற்பொழுது அணியில் தேர்வு செய்யப்படாததற்கு கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

- Advertisement -

இதற்கான காரணம் என்னவென்றால், வெஸ்ட் இண்டீஸ் தொடர் முடிந்து அயர்லாந்து தொடர் மற்றும் ஆசியக் கோப்பை போட்டிகள் இருக்கிறது. இதற்கு அடுத்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி செப்டம்பர் இறுதியில் விளையாடுகிறது.

இதேசமயத்தில் அக்டோபர் ஐந்தாம் தேதி துவங்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் இந்திய அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அக்டோபர் எட்டாம் தேதி ஆஸ்திரேலியா அணியை சந்திக்கிறது.

இதனால் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு பரிசீலிக்கப்படும் பெயர்களில் யார் இருப்பார்களோ, அவர்களால் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய அணியில் இணைந்து விளையாட முடியாது. ஒரு நாள் உலகக் கோப்பை தொடருக்கு யாருடைய பெயர்கள் எல்லாம் பரிசீலிக்கப்படாதோ அவர்களைக் கொண்ட அணியாகத்தான் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு செல்லும் இந்திய அணி இருக்கும்.

எனவே இந்த அடிப்படையில் உலகக் கோப்பைக்கு சஞ்சு சாம்சனின் பெயர் பரிசீலனையில் இருப்பது உறுதியாகி இருக்கிறது. மேலும் கே எல் ராகுல் முதல் விக்கெட் கீப்பராக இருப்பார். இரண்டாவது விக்கெட் கீப்பராக இஷான் கிஷானா? இல்லை சஞ்சு சாம்சனா என்பதுதான் தற்போதைய கேள்வியாக இருக்கிறது.

கே எல் ராகுல் மாற்று துவக்க ஆட்டக்காரர் ஆகவும் இருப்பார் என்பதால், சஞ்சு சாம்சன் மிடில் ஆர்டர் பேக்கப் பேட்ஸ்மேன் ஆக இருப்பார். எனவே இசான் கிஷானை விட சஞ்சு சம்சம்தான் உலகக் கோப்பையில் விளையாட அதிக வாய்ப்புகள் இருக்கிறது. எனவே இதனால் சஞ்சு சாம்சன் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் இந்தக் கொண்டாடி வருகிறார்கள் அதற்கான இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.