வீடியோ: பெரிய பேட்ஸ்மேன்களே நடுங்கும் ரஷித் கான் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸ் அடித்த சஞ்சு சாம்சன்! – ஐபிஎல் வரலாற்றில் இதை செய்த 2ஆவது வீரர்; முதல் வீரர் யார்?

0
430

ரஷித் கான் ஓவரில் ஹாட்ரிக் சிக்சர் அடித்ததன் மூலம் ஆட்டத்தில் திருப்புமுனையை கொண்டு வந்தது மட்டுமல்லாது. புதிய ரெக்கார்டையும் படைத்திருக்கிறார் சஞ்சு சாம்சன்.

குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 185 ரன்கள் அடித்தது. இந்த இலக்கை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 10 ஓவர்களில் வெறும் 53 ரன்கள் மட்டுமே அடித்து மூன்று விக்கெட்டுகளை இழந்து பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டது.

- Advertisement -

அடுத்த ஓவரிலேயே மேலும் ஒரு விக்கெட்டை இழந்து இன்னும் மோசமான நிலைக்கு சென்ற ராஜஸ்தான் அணிக்கு, கடைசி 9 ஓவர்களில் கிட்டத்தட்ட 130 ரன்கள் அடிக்க வேண்டிய நிலை இருந்தபோது, 13ஆவது ஓவரை ரஷித் கான் வீசினார். அதில் ஹாட்ரிக் சிக்ஸர் அடித்து ஆட்டத்தில் மிகப்பெரிய திருப்புமுனை ஏற்படுத்தியதோடு ரன் குவிக்கும் வேகத்தையும் அதிகரித்தார் சஞ்சு சாம்சன்.

32 பந்துகளில் 60 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்த சஞ்சு சாம்சன், ராஜஸ்தான் அணிக்கு புதிய நம்பிக்கையை கொடுத்தார். அடுத்ததாக களத்தில் இருந்து சிம்ரன் ஹேட்மயர், அதை அப்படியே தொடர்ச்சியாக எடுத்துச்சென்று அணியின் வெற்றிக்கும் உதவினார். கடைசி 10 ஓவர்களில் 135 ரன்கள் அடித்து மிகச்சிறப்பான வெற்றியை பெற்றது ராஜஸ்தான் அணி.

பொதுவாக ரஷித் கான் பந்தை கணித்து ஆடுவது கடினம் என்பதால், அவரது ஓவர்களில் பேட்ஸ்மேன் அடிக்க முயற்சிக்காமல் தடுப்பாட்டம் அல்லது ஓரிரு ரன்கள் அடித்து எடுத்துக்கொள்வர். பெரிய ஷாட்கள் ஆடமாட்டார்கள். விக்கெட் இழக்காமல் இருக்க வேண்டும், மற்ற ஓவர்களில் பார்த்துக் கொள்ளலாம் என்ற அணுகுமுறையில் இருப்பார்கள்.

- Advertisement -

ஆனால் சஞ்சு சாம்சன் நிறுத்தாமல் ஹாட்ரிக் சிக்ஸ் அடித்து மிகப்பெரிய அழுத்தத்தை கொடுத்தார். ஐபிஎல் வரலாற்றில் ரஷித் கான் ஓவர்களில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடிக்கப்பட்டது இதுவே இரண்டாவது முறையாகும். இதற்கு முன்னர் கிறிஸ் கெயில் ஒருமுறை அடித்திருக்கிறார். அதன்பிறகு இப்போது சஞ்சு சாம்சன் இதனை செய்து காட்டியிருப்பது புதிய வரலாறாக பதிவாகியுள்ளது.

ஹாட்ரிக் சிக்ஸர் வீடியோ: