மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் தொடர் டி20 போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது.
இரண்டு தோல்விகளுக்கு பிறகு தன் சொந்த மைதானத்தில் மும்பை அணி கலந்து கொள்வதால் இந்த போட்டியில் மும்பை அணி நிச்சயம் ஜெயிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே அணியிலும் மாற்றம் செய்து கடந்த சீசனில் கலக்கிய மத்வால் உள்ளே கொண்டுவரப்பட்டார். இருப்பினும் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மும்பை அணியை பேட்டிங் செய்ய பணித்தது.
பெரிய ஸ்கோர் குவித்தால் மட்டுமே பலமான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சமாளிக்க முடியும் என்று பேட்டிங் தொடங்கியது மும்பை இந்தியன்ஸ். அணிக்கு ஆரம்பமே ஆச்சரியம் அளிக்கும் விதமாக அனுபவ வீரர் ரோகித் சர்மா முதல் பந்திலேயே ட்ரெண்ட் போல்டிடம் விழுந்தார். அதற்குப் பிறகு வந்த அடுத்தடுத்து இரண்டு வீரர்களும் முதல் பந்திலேயே வெளியேற, மும்பை இந்தியன்ஸ் அணியின் திட்டம் அப்படியே தலைகீழாக மாறியது.
அப்போது ஆடுகளமும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்துவீச்சாளர்களுக்கு நன்கு ஒத்துழைத்தது. இதன் பின்னர் வேறு வழியில்லை விக்கெட் தடுத்து ரன்கள் கொண்டு வர வேண்டும் என்று ஹர்திக் பாண்டியா மற்றும் திலக் வர்மா ஆகியோர் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டு ரன்களைக் கொண்டு வர ஆரம்பித்தனர். இருப்பினும் இந்த ஜோடி நீண்ட நேரம் நிற்கவில்லை.
34 ரன்களில் ஹர்திக் பாண்டியா வெளியேற, 33 ரன்களில் திலக் வர்மாவும் வெளியேறினார். அதன் பிறகு மும்பை இந்தியன்ஸ் அணி வீழ்ச்சி உறுதியானது. 20 ஓவர்களில் 125 ரன்கள் மட்டுமே குவித்து ஒன்பது விக்கெட்டுகளை இழந்து இருந்தது. அடுத்து களம் இறங்கிய மும்பை அணி விரைவில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்த முடியாவிட்டாலும் மூன்று விக்கெட்டுகளை 48 ரன்களுக்குள் எடுத்தது. அதன் பிறகு களத்தில் நின்ற ரியான் பராக் ஆட்டத்தை வெற்றிகரமாக எடுத்துச் சென்று விட்டார். 39 பந்துகளில் 54 ரன்கள் குறித்து ராஜஸ்தான் ராயல் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இது குறித்து அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறுகையில்
ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன்
“இந்த ஆட்டத்தில் முக்கிய பங்கு வகித்தது டாஸ் என்று நினைக்கிறேன். அதுவே இந்த ஆட்டத்தை நிர்ணயிப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. மும்பை அணி தொடங்கும் போது இந்த ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு மிகவும் கடினமாக இருந்தது. பர்கரின் வேகமும், போல்டின் அனுபவமும் எங்களுக்கு கை கொடுத்தது. போல்ட் சர்வதேச கிரிக்கெட்டில் நீண்ட காலம் விளையாடி வருவதால் அவர் இந்த ஆடுகளத்தை நன்றாக பயன்படுத்துவார் என்று எதிர்பார்த்தோம்.
இதையும் படிங்க: வேண்டாம் போதும் விட்டுருங்க.. ஹர்திக் பாண்டியாவுக்காக கேட்ட ரோகித் சர்மா.. நெகிழ்ச்சியான சம்பவம்
ஆனால் விரைவிலேயே நான்கு விக்கெட்டுகள் விழும் என்று நினைக்கவில்லை. ஆனால் அது அற்புதமாக இருந்தது. எங்களின் வேலைகளை அறிந்து நாங்கள் முன்னேறிக் கொண்டிருக்கிறோம். பவர் பிளே எங்களுக்கு நல்ல விதமாக அமைந்ததால், அஸ்வின் விக்கெட்டுக்கான முயற்சியில் இறங்கவில்லை. எனவே இது ஒரு குழு விளையாட்டு” என்று கூறியிருக்கிறார்.