தற்போது நடைபெற்று வரும் கேரள டி20 லீக்கில் மீண்டும் சஞ்சு சாம்சன் அதிரடியான அரை சதத்தை அடித்து இந்திய டி20 கேப்டன் சூரியகுமார் யாதவுக்கு புதிய தலைவலியை உருவாக்கி இருக்கிறார்.
இந்த மாதம் செப்டம்பர் ஒன்பதாம் தேதி முதல் யுஏஇ-ல் எட்டு ஆசிய நாடுகள் பங்கு பெறும் ஆசியக் கோப்பை தொடர் டி20 வடிவத்தில் நடைபெற இருக்கிறது. இதில் இந்திய அணியின் துணை கேப்டனாக சுப்மன் கில் கொண்டுவரப்பட்டிருக்கிறார். இதன் காரணமாக சஞ்சு சாம்சனுக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்காது என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் கேரள டி20 லீக்கில் ஆரம்பத்தில் சஞ்சு சாம்சன் பேட்டிங் வரிசையில் ஐந்தாவது இடத்தில் வந்தார். ஆனால் அவரால் எதிர்பார்த்தபடி அதிரடியாக விளையாட முடியவில்லை. ஏனென்றால் ஆசியக் கோப்பை பிளேயிங் லெவனில் ஐந்தாவது இடத்தில் விளையாடுவதற்கு முயற்சி செய்தார்.
இதைத்தொடர்ந்து துவக்க ஆட்டக்காரராக வந்த சஞ்சு சாம்சன் தன்னுடைய வழக்கமான அதிரடியில் மிரட்ட ஆரம்பித்தார். சிறப்பாக விளையாடிய அவர் ஒரு சதம் மற்றும் இரண்டு அரை சதங்கள் அடித்து இந்திய அணி நிர்வாகத்திற்கு பெரிய சிக்னல் கொடுத்தார்.
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் மீண்டும் 41 பந்துகளில் அதிரடியாக 83 ரன்கள் எடுத்து மூன்றாவது அரை சதத்தை பதிவு செய்திருக்கிறார். வெறும் இரண்டு பவுண்டரிகள் மட்டுமே அடித்த அவர் ஒன்பது சிக்ஸர்கள் அடித்து மிரட்டி இருக்கிறார். பெரிய ஷாட் விளையாடுவதில் தொடர்ந்து கவனம் செலுத்தி திறமையை நிரூபித்து வருகிறார்.
இதையும் படிங்க : கோலி என்னை ‘தொலஞ்சு போ’னு சொன்னாரு.. அவர் நம்பவே இல்ல.. முதல் டெஸ்ட் அரை சதம் குறித்து இசாந்த் சர்மா
இதன் காரணமாக ஆசியக் கோப்பை இந்திய பிளேயிங் லெவனில் துவக்க ஆட்டக்காரர் இடத்தை அபிஷேக் ஷர்மா, கில் மற்றும் சஞ்சு சாம்சன் எனும் ஓவரில் எந்த இருவருக்கு தருவது என கேப்டன் சூரியகுமார் யாதவுக்கும் பயிற்சியாளர் கம்பீருக்கும் புதிய தலைவலி உருவாகி இருக்கிறது. ஆசியக் கோப்பை தொடருக்கு இந்திய அணி வருகின்ற நான்காம் தேதி துபாய் செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.