இந்திய அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளரான இஷாந்த் சர்மா ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
சிறுவயதிலிருந்தே விராட் கோலி மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் டெல்லி அணிக்காக கிரிக்கெட் விளையாடி இருக்கும் நிலையில், விராட் கோலி உடனான ஜாலியான ஒரு அனுபவம் குறித்து இசான் சர்மா தனது கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளராக திகழும் இஷாந்த் சர்மா, அதிகாரப்பூர்வமாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவிக்கவில்லை என்றாலும் கடைசியாக 2021 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக கிரிக்கெட் விளையாடி இருக்கிறார். அதற்குப் பிறகு எந்த ஒரு சர்வதேச போட்டியிலும் இஷாந்த் சர்மா பங்கு பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
இந்த சூழ்நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணி தனது சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட ஒரு வீடியோவில் இஷாந்த் சர்மா தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து ஜாலியான நினைவுகளை பேசி இருக்கிறார். அப்போதைய கேப்டன் விராட் கோலி உடன் அவர் விளையாடிய போது, இருவருக்கும் இடையே நடைபெற்ற சில நகைச்சுவையான நினைவுகளை பகிர்ந்து பேசி இருக்கிறார்.
இது குறித்து அவர் கூறும் போது “டெஸ்ட் கிரிக்கெட்டில் நான் எனது முதல் அரை சதத்தை பதிவு செய்தது என்பது ஒரு அற்புதமான விஷயமாகும். நான் பேட்டிங் செய்யப் போவதற்கு முன்பாக கேப்டன் விராட் கோலியிடம் பேசிக் கொண்டிருந்த போது விராட் என்னிடம், ‘பேட்டிங் களம் இறங்கி என்ன செய்யப் போகிறாய் என்று கேட்டார்? நான் பேட்டிங் செய்து ரன்கள் எடுக்கப் போகிறேன் என்று கூறினேன். அப்போது அவர் சிரித்துக் கொண்டே ‘தொலைந்து போ’ என்று கூறினார்.
இதையும் படிங்க:பயிற்சியாளர் பதவியில் விலகல்.. டிராவிட் வருத்தப்பட்டுதான் வெளியே போனாரு.. இதுதான் நடந்திருக்கும் – டிவில்லியர்ஸ் ஓபன் டாக்
நாங்கள் இருவருமே டெல்லி பையன்கள் என்பதால் எங்கள் சிறு வயதில் இருந்தே ஒன்றாக கிரிக்கெட் விளையாடி உள்ளோம். நான் பேட்டிங் செய்வதற்கு முன்பாக விராட் என்னிடம், நீ பந்தை தடுத்து விளையாடு, மற்றவை விகாரி பார்த்துக் கொள்வார் என்று கூறினார்” என்று இஷாந்த் சர்மா பேசியிருக்கிறார். இஷாந்த் ஷர்மா கூறியது 2019 ஆம் ஆண்டு ஜமைக்காவில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் 9வது விக்கெட்டுக்கு களமிறங்கி 80 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார். அப்போது களத்தில் இருந்த அனுமா விகாரியுடன் 112 ரன்கள் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.






