இந்திய கிரிக்கெட்

ஐபிஎல்-ல் இதுக்கு நான் எதிரானவன்.. இத வச்சு பல பேர் ஓபி அடிக்கிறாங்க – சுரேஷ் ரெய்னா விமர்சனம்

​ஐபிஎல் தொடரில் அறிமுகப்படுத்தப்பட்ட இம்பாக்ட் பிளேயர் விதிமுறையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கடுமையாக விமர்சித்துள்ளார்.

- Advertisement -

​கடந்த 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த இம்பாக்ட் பிளேயர் விதியால் மேட்ச்களில் 200 முதல் 300 ரன்கள் வரை எளிதாக அடிக்கப்படுகிறது. இதனால் பேட்டர்களுக்கு அதிக அட்வாண்டேஜ் கிடைப்பதாகவும், பவுலர்கள் கடும் பிரஷரை எதிர்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

​மேலும் வெளிநாட்டு டி20 லீக் தொடர்களில் இந்திய பிளேயர்கள் விளையாட பிசிசிஐ தடை விதித்திருப்பது சரியான முடிவே என்றும், தற்போது நமது லீக் உலகளவில் மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளதாகவும் சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.

​இதுகுறித்து சுரேஷ் ரெய்னா பேசும்போது “நான் இம்பாக்ட் பிளேயர் விதிமுறைக்கு எதிரானவன், பல ஃபிட்டான பிளேயர்கள் பேட்டிங் செய்துவிட்டு சும்மா உட்கார்ந்து கொள்கிறார்கள். இதனால் பவுலர்களுக்கு இதில் எதுவும் இல்லை, மேட்ச்களில் 300 ரன்கள் வரை அடிக்கப்படும் போது பவுலர்களுக்குத்தான் அதிக பிரஷர் ஏற்படும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

​மேலும் வெளிநாட்டு லீக் பற்றி பேசும்போது “தற்போது இந்திய வீரர்கள் வெளிநாட்டு லீக்குகளில் விளையாட அனுமதிக்காதது நல்ல விஷயம், நமது லீக் தற்போது உலகை ஆள்கிறது. முன்பு நான் வெளிநாட்டு லீக்கில் விளையாட முயன்றேன் ஆனால் பிசிசிஐ அனுமதிக்கவில்லை, அது அப்போது சரியானதாக இருந்தாலும் தற்போது நமது லீக்கின் தரமே மிக உயர்ந்துள்ளது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by