சஞ்சு சாம்சன் நேற்று இந்த தவறை செய்தார் ; ஆனாலும்…; ஆகாஷ் சோப்ரா புகழ்ந்து சுட்டிக்காட்டல்!

0
855
Samson

தென் ஆப்பிரிக்கா இந்தியா அணிகளுக்கு இடையே நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி நேற்று உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ நகர மைதானத்தில் நடந்தது!

இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். மழையின் காரணமாக இந்தப் போட்டி 40 ஓவர் கொண்ட ஆட்டமாக நடத்தப்பட்டது. ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு சற்று சிரமமாக இருந்தது. இதனால் பேட்டிங் செய்ய களமிறங்கியது தென்ஆப்பிரிக்க துவக்க வீரர்கள் தடுமாறினார்கள்.

- Advertisement -

ஆனால் இதற்குப் பிறகு களமிறங்கிய தென்ஆப்ரிக்க அணியின் நடுவரிசை பேட்ஸ்மேன்கள் கிளாஸன் மற்றும் டேவிட் மில்லர் அதிரடியாக அரை சதங்கள் அடித்து 40 ஓவர்கள் முடிவில் தென்ஆப்ரிக்க அணியை 249 ரன்கள் எட்ட வைத்தார்கள்.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் சுப்மன் கில் மற்றும் ஷிகர் தவான் இருவரும் சீக்கிரத்தில் வெளியேறினார்கள். இதற்கடுத்து களம் கண்ட ருதுராஜ் மற்றும் இஷான் கிஷான் இருவரும் பெரிதாய் ரன்களையும் அடிக்கவில்லை, அதே சமயத்தில் பந்துகளையும் வீணடித்து விட்டார்கள்.

இதற்குப் பின்பு இணைந்த ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் சஞ்சு சாம்சன் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஸ்ரேயாஸ் ஐயர் 50 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இறுதிவரை களத்தில் போராடிய சஞ்சு சாம்சன் 63 பந்துகளில் 86 ரன்கள் குவித்தார். ஆனால் 9 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆபிரிக்க அணி வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் கடைசி கட்ட ஓவர்களில் ஆவேஸ் கான் அடித்த பந்திற்கு 2 ரன்கள் ஓடிய காரணத்தால், அந்த நேரத்தில் பேட்டிங் முனையில் சஞ்சு சாம்சனால் நிற்க முடியாமல் போனது ஒரு பின்னடைவாக அமைந்தது.

- Advertisement -

தற்போது இது குறித்து ஆகாஷ் சோப்ரா
“சஞ்சு சாம்சனுக்கு எல்லா இடத்திலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர் பேட்டிங் செய்யும் பொழுது பேட்டிங் செய்வது மிகவும் சுலபம் என்பது போல் காட்டுகிறார். அவர் ஏதோ வேறு ஒரு லீக்கில் பேட்டிங் செய்வது போல் இருந்தது. அவரிடம் பெரிய எந்த கால் அசைவுகளும் இல்லை. கிரீஸை விட்டு இறங்கிப் போகும் போது மட்டுமே இருந்தது. மற்றபடி அவர் நிலையாக நின்று விளையாடினார். மேலும் சரியான நேரத்தில் பந்தை விளையாட பலத்தை சரியாக இடம் மாற்றினார் ” என்று புகழ்ந்து கூறினார்.

மேலும் தொடர்ந்து பேசும்பொழுது
“குறிப்பிட்ட அந்த நேரத்தில் இரண்டு ரன்கள் ஓடாமல், சஞ்சு சாம்சன் பேட்டிங் முனையில் நின்று இருந்தால் இந்தியா வெற்றி பெற்றிருக்கும். மற்றபடி சஞ்சு சாம்சன் பேட்டிங் மிகச்சிறப்பாக இருந்தது. ஆட்டத்தை முடிப்பது என்பது எப்போதுமே கடினமான வேலை ” என்று கூறியிருக்கிறார்!