என் சதத்தை நான் பிளமிங்குக்கு அர்ப்பணிக்கிறேன்.. 3 மேட்ச் தோத்தும் கூட 50 வினாடிகள் மட்டுமே மீட்டிங் நடந்தது – சஞ்சு சாம்சன் பேட்டி

0
38
Sanju

இன்று டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்த சிஎஸ்கே வீரர் சஞ்சு சாம்சன் ஆட்டநாயகன் விருது பெற்றார். மேலும் அவர் இந்த போட்டி குறித்து பேசி இருக்கிறார்.

கடந்த மூன்று போட்டிகளாக சிஎஸ்கே அணி தொடர் தோல்வியை இந்த ஐபிஎல் தொடரில் சந்தித்து வந்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து டிரேடிங் செய்யப்பட்ட சஞ்சு சாம்சன் மூன்று போட்டிகளிலும் பெரிய அளவில் விளையாடவில்லை.

- Advertisement -

பெரிய நம்பிக்கை வைத்தார்கள்

இந்த நிலையில் இன்று களம் இறங்கிய சஞ்சு சாம்சன் ஆரம்ப முதலே சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். மேலும் இறுதி வரை களத்தில் நின்று 56 பந்துகளில் 115 ரன்கள் எடுத்து பேட்டிங்கை முடித்து வைத்தார்.

இந்த போட்டி குறித்து பேசிய சஞ்சு சாம்சன் “சிஎஸ்கே அணி நிர்வாகம் என் மேல் வைத்த நம்பிக்கை மிகவும் பொறுப்பு கொண்டதாக இருந்தது. அதிர்ஷ்டவசமாக எல்லாம் நல்லபடியாக நடந்து இருக்கிறது. வேறொரு அணியில் இருப்பது போலவே தெரியவில்லை. அணி நிர்வாகத்தில் உள்ளவர்கள் மிகவும் நல்லவர்கள். மூன்று போட்டிகள் தோற்றம் கூட வெறும் ஐம்பது வினாடிகள்தான் அணி கூட்டத்தை நடத்தினார்கள்”

- Advertisement -

இவருக்கு சமர்ப்பிக்கிறேன்

“நான் நிறைய முறை தோல்வி அடைந்திருக்கிறேன். அப்போதெல்லாம் மனம் சிதறிப் போகும். அங்கிருந்து நாம் நம்முடைய அடிப்படை விஷயங்களை தொடர்ந்து செய்து நம்பிக்கை வைக்க வேண்டும். நான் துணை ஊழியர்களுடன் சிறப்பான பயிற்சியை மேற்கொண்டேன். நல்ல பார்ட்னர்ஷிப் அமைவது முக்கியம். ஆயுஸ் நல்ல மெச்சூரிட்டி காட்டினார்”

இதையும் படிங்க : ஒரு ஓவர்ல டிம் டேவிட்டுக்கு 30 ரன் கொடுத்துட்டேன்.. அதுக்கப்புறம் என் நோக்கமே இதுதான் – ஜேமி ஓவர்டன் கருத்து

“என்னுடைய கொண்டாட்டம் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்மிங்காக செய்தேன். அவருடைய பணி எவ்வளவு சவாலானது என்பது எனக்கு தெரியும். எனவே இந்த சதத்தை அவருக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்று விரும்பினேன்” எனக் கூறியிருக்கிறார்.

- Advertisement -