பிசிசிஐயை மதிக்காமல்.. துபாயில் உலா வரும் சஞ்சு சாம்சன்.. சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடுவதில் சிக்கல்.. முழு விபரம்

0
185

வருகிற பிப்ரவரி மாதம் பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ள நிலையில் வருகிற 19ஆம் தேதி இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட உள்ளது.

இந்த சூழ்நிலையில் இந்திய நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் சாம்பியன்ஸ் டிராபி அணியில் இடம் பிடிப்பது அவருக்கு பெரிய பிரச்சினையை உண்டாக்கி இருக்கிறது.

- Advertisement -

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர்

இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தோல்விகளை சந்தித்து மோசமான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. இந்த நிலையில் இந்திய அணி அடுத்ததாக விளையாட உள்ள முக்கிய ஐசிசி தொடரான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இதற்காக வலுவான இந்திய அணியை தேர்வு செய்யும் இடத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் தற்போது மிகத் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

இந்த சூழ்நிலையில் இந்திய டி20 அணியில் தற்போது நிரந்தர இடம் பிடித்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சஞ்சு சாம்சன் ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் இடம் பிடிக்கும் முனைப்பில் ஈடுபட்டு வரும் நிலையில் இந்தியா உள்நாட்டு கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபி கிரிக்கெட் தொடரில் சாம்சன் விளையாடவில்லை. இந்திய கிரிக்கெட் வாரியம் சர்வதேச வீரர்கள் உள்நாட்டு தொடரில் விளையாட வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தி வந்த நிலையில் சாம்சன் விஜய் ஹசாரே டிராபி தொடரை புறக்கணித்துள்ளார்.

- Advertisement -

சஞ்சு சாம்சன் இடம்பெறுவதில் சிக்கல்

மேலும் அதற்கான உரிய காரணத்தையும் அவர் தெரிவிக்காத நிலையில், பிசிசிஐ அவர் மீது வருத்தத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இதற்கு முன்னர் இசான் கிசான் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் பிசிசிஐயின் அறிவுறுத்தலை மறுத்து செயல்பட்டு மத்திய ஒப்பந்தத்தை இழந்த நிலையில் தற்போது சாம்சனுக்கும் அதே நிலை ஏற்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் அவர் விளையாடாததற்கான உரிய காரணத்தை தெரிவிக்க விட்டால் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அவர் இடம்பெற மாட்டார் என்று ஆச்சரியமூட்டும் தகவல் வெளிவந்துள்ளது

இதையும் படிங்க:கேஎல் ராகுல் இல்லை.. இவர்தான் டெல்லி அணியின் கேப்டன்.. இந்த அனுபவம் அவருக்கு உண்டு – தினேஷ் கார்த்திக் கணிப்பு

இது குறித்து பிசிசிஐ முக்கிய நிர்வாகி ஒருவர் கூறும் போது “தேர்வு குழு சரியான காரணத்தை எதிர்நோக்கி இருக்கிறது. இல்லையெனில் அவர் ஒரு நாள் தொடரில் இடம் பெறுவது கடினமாகிவிடும். உள்நாட்டு கிரிக்கெட்டின் முக்கியத்துவத்தை பிசிசிஐ தற்போது தெளிவாக அறிந்துள்ளது. கடந்த ஆண்டு ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இசான் கிஷான் ஆகியோர் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடாமல் மத்திய ஒப்பந்தங்களை தவறவிட்டனர். மேலும் சாம்சன் உள்நாட்டு தொடரில் விளையாடாமல் போனதற்கான காரணம் எதுவும் கூறாத நிலையில் தற்போது அவர் துபாயில் நேரத்தை செலவிட்டு வருகிறார்” என்று கூறப்பட்டுள்ளது.

- Advertisement -