கேஎல் ராகுல் இல்லை.. இவர்தான் டெல்லி அணியின் கேப்டன்.. இந்த அனுபவம் அவருக்கு உண்டு – தினேஷ் கார்த்திக் கணிப்பு

0
212

18 வது ஐபிஎல் சீசன் கிரிக்கெட் தொடர் வருகிற மார்ச் மாதம் முதல் இந்தியாவில் கோலாகலமாக நடைபெற இருக்கிறது. இதில் ஏற்கனவே விளையாடிய முன்னணி வீரர்கள் தற்போது வேறு அணிக்கு மாறியுள்ளனர்.

இந்த சூழ்நிலையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் புதிய கேப்டன் குறித்து இந்திய முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

18வது ஐபிஎல் சீசன் கிரிக்கெட் திருவிழா

இந்தியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு டி20 கிரிக்கெட் தொடரான ஐபிஎல் லீக் இந்தியாவில் இதுவரை 17 சீசன்கள் வெற்றிகரமாக நடைபெற்று அடுத்த சீசன் மார்ச் மாதம் முதல் நடைபெற உள்ளது. இதில் டெல்லி அணிக்காக விளையாடிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் டெல்லி கேப்பிட்டல் அணியில் இருந்து தற்போது லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணிக்காக இந்த வருடம் விளையாட இருக்கிறார். ரிஷப் பண்ட் டெல்லி அணியில் இருந்து லக்னோ அணிக்கு மாறிய நிலையில் கே எல் ராகுல் லக்னோ அணியிலிருந்து தற்போது டெல்லி அணிக்கு மாறியிருக்கிறார்.

இந்த நிலையில் லக்னோ அணியின் புதிய கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதேபோல டெல்லி அணிக்கு மாறியுள்ள கேஎல் ராகுல் அடுத்த கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று அனைவரும் எதிர்பார்க்கும் வேளையில் அதற்கு மாறாக டெல்லி அணியால் தக்கவைக்கப்பட்டுள்ள அக்ஷார் பட்டேல் புதிய கேப்டனாக நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக இந்திய முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் கூறியிருக்கிறார்.

- Advertisement -

டெல்லி அணியின் புதிய கேப்டன்

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “இந்த சமயத்தில் அக்சார் பட்டேலுக்கு எனது வாழ்த்துக்களை கூறிக் கொள்கிறேன். டெல்லி அணியின் மூன்றாவது கேப்டனாக அவர் இருக்கப் போகிறார். எனவே டெல்லி அணியை வழிநடத்தவும் இளைஞர்களுக்கு வழி காட்டவும் அவருக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக இது இருக்கப் போகிறது. உள்நாட்டுத் தொடரின் குஜராத் அணிக்காக அவர் ஏற்கனவே கேப்டனாக இருந்து வருகிறார். எனவே அவருக்கு அனைத்து வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க:46/4.. சரிந்த பாகிஸ்தான் அணி.. காப்பாற்றிய ஷகீல் ரிஸ்வான்.. வெஸ்ட் இண்டீஸ் அபார பந்துவீச்சு.. முதல் டெஸ்ட்

கடந்த சீசனில் ரிஷப் பண்ட் காயம் காரணமாக ஒரு சில போட்டிகளில் விளையாடாமல் போக அவருக்கு பதிலாக அக்ஷார் பட்டேல்தான் டெல்லி அணியை வழி நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்திய அணி சமீபத்தில் டி20 உலக கோப்பையை வெற்றி பெறுவதற்கு இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடி கோப்பையை வெல்ல இவரும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தார். எனவே இவர் மீது தற்போது டெல்லி ரசிகர்களுக்கு அதிக அளவில் எதிர்பார்ப்பு எகிறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -