இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு முதல் டி20 போட்டியில் வெற்றி பெற்றுள்ள நிலையில் இரண்டாவது டி20 போட்டியில் தற்போது விளையாடி வருகிறது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரரான சஞ்சு சாம்சன் ஒரு வருத்தமான சாதனையை படைத்து விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவை மிஞ்சி இருக்கிறார்.
டக் அவுட் ஆகி வெளியேறிய சஞ்சு சாம்சன்
இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து நான்கு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் சூரியகுமார் யாதவ் தலைமையில் விளையாடி வருகிறது. இதில் முதல் டி20 போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி சிறப்பாக விளையாடி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடி சதம் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கிய பங்காற்றினார்.
இந்த சூழ்நிலையில் தற்போது நடைபெற்று வரும் இரண்டாவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் குவித்து இருக்கிறது. இதில் துவக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் மூன்று பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட நிலையில் மார்க்கோ ஜான்சனின் பந்துவீச்சில் டக் அவுட் ஆகி வெளியேறி இருக்கிறார்.
விராத் கோலி ரோஹித் சர்மாவை முந்திய சாம்சன்
இந்தப் போட்டியில் டக் அவுட் ஆகி வெளியேறி இருப்பதன் மூலமாக சாம்சன் ஒரு வருத்தமான சாதனையை படைத்திருக்கிறார். அதாவது ஒரு காலண்டர் ஆண்டில் டி20 போட்டியில் நான்கு டக் அவுட்டுகளை பதிவு செய்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை சஞ்சு சாம்சன் படைத்திருக்கிறார். இதற்கு முன்பு ஜனவரி மாதத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 போட்டியில் டக் அவுட் ஆகி வெளியேறிய சஞ்சு அதற்குப் பிறகு இலங்கை அணி டி20 தொடரில் இரண்டு போட்டிகளிலும் டக் அவுட் ஆகி இருக்கிறார். அதாவது கடந்த போட்டியில் சதம் அடித்து சஞ்சு சாம்சன் சாதனை படைத்த நிலையில் அதற்குப் பிறகு 48 மணி நேரத்தில் இப்படி ஒரு வருத்தமான சாதனையையும் படைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:இந்திய அணி பாகிஸ்தான் வரலனா.. எங்க கிரிக்கெட் வாரியம் இந்த முடிவை எடுப்பது உறுதி – பாக் முன்னாள் கேப்டன் பேட்டி
இதன் மூலமாக நான்கு டக் அவுட்களை பதிவு செய்த முதல் இந்திய வீரராக மாறி இருக்கிறார். இதற்கு அடுத்த இடத்தில் இந்திய முன்னாள் வீரர் யூசுப் பதாவும் 2008ஆம் ஆண்டு மூன்று முறையும் ரோஹித் சர்மா 2018 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் மூன்று முறையும் விராட் கோலி 2024ஆம் ஆண்டு மூன்று முறை டக் அவுட் ஆகி வெளியேறி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.