இந்திய அணி பாகிஸ்தான் வரலனா.. எங்க கிரிக்கெட் வாரியம் இந்த முடிவை எடுப்பது உறுதி – பாக் முன்னாள் கேப்டன் பேட்டி

0
482

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மினி உலகக் கோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்த உள்ள நிலையில் இதற்கான ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

இந்த சூழ்நிலையில் இந்திய அணி பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கு பெறவில்லை என்றால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்த மிகப்பெரிய முடிவை எடுக்கும் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரசீத் லத்தீப் கூறியிருக்கிறார்.

- Advertisement -

தயக்கம் காட்டும் இந்திய அணி

2017ஆம் ஆண்டுக்குப் பிறகு மினி உலகக் கோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடைபெற இருக்கிறது. ஒரு நாள் வடிவில் நடைபெறும் இந்தத் தொடர் தற்போது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஐசிசி தொடரான இந்தத் தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்த இருக்கிறது. இந்த சூழ்நிலையில் பாதுகாப்பு பிரச்சனைகளின் காரணமாக இந்திய கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடுவதை 2008ஆம் ஆண்டோடு நிறுத்தியது.

இருப்பினும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், இந்தியாவில் நடைபெறும் உலக கோப்பை தொடர்களில் பங்கு பெற்று வந்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்திய அணிக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலத்த வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது என்று தெரிவித்தும் இந்திய கிரிக்கெட் வாரியம் மினி உலகக் கோப்பை தொடரில் பங்கு பெற தயக்கம் காட்டி வருகிறது. இந்த சூழ்நிலையில் இந்திய அணி இந்த தொடரில் பங்கு பெறவில்லை என்றால் போட்டியை நடத்தும் பாகிஸ்தான் அணியும் பங்கேற்காது என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ரசீத் லத்தீப் திடுக்கிடும் தகவலை வெளியிட்டு இருக்கிறார்.

- Advertisement -

பாகிஸ்தான் அரசு இந்த பெரிய முடிவு எடுக்கும்

இதுகுறித்து அவர் கூறும் போது “இந்திய அணி இரு தரப்பு போட்டிகளில் விளையாட விரும்பவில்லை என்று நாங்கள் கூறலாம். ஆனால் நீங்கள் ஏற்கனவே ஐசிசி தொடர்களில் விளையாடுவதற்கு கையெழுத்திட்டுள்ளதால் ஐசிசி தொடர்களை மறுக்க முடியாது. இதற்காக இந்தியா திடமான நிலைமையை உருவாக்க வேண்டும். இந்திய அணி இங்கு விளையாடவில்லை என்றால் பாகிஸ்தானும் சாம்பியன் டிராபி தொடரில் பங்கு பெறாமல் பெரிய நடவடிக்கையை எடுக்கும்.

இதையும் படிங்க:சாம்சன் இந்த 2 காரியத்தை செய்ய மாட்டார்.. அழுக்கான ரன்னையும் எடுக்க மாட்டார் – அஸ்வின் பாராட்டு

இந்தியாவும் பாகிஸ்தானும் இருப்பதால்தான் ஐசிசி இருக்கிறது. நாங்கள் விளையாட மாட்டோம் என்று பாகிஸ்தான் அரசு கூறினால் போட்டியை யாரும் பார்க்க மாட்டார்கள் என்பதால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் எந்த பயனும் இல்லை” என்று கூறியிருக்கிறார். இந்தத் தொடர் ஆரம்பிக்க இன்னும் மூன்று மாதங்கள் இருக்கும் நிலையில் இந்திய அணி பாகிஸ்தானில் விளையாட சமாதிக்குமா? அல்லது போட்டிகள் இரண்டு நாடுகளுக்கும் பொதுவான இடத்தில் நடத்தப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

- Advertisement -