சஞ்சு சாம்சன் கேப்டன் ; உம்ரான் மாலிக் ராகுல் திரிபாதிக்கு அணியில் இடம்!

0
107
India A team

கடந்த திங்கட்கிழமை, வர இருக்கின்ற அக்டோபர் நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் நடக்க இருக்கிற டி20 உலகக்கோப்பை தொடருக்கு, இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழு 15 பேர் கொண்ட அணியையும், மேலும் 4 ரிசர்வு வீரர்களையும் அறிவித்தது.

இந்த அணி தொடர்பாக இரு வீரர்களை மையமாக வைத்து விவாதங்கள் கிளம்பி இருந்தது. ஒருவர் 15 பேர் கொண்ட அணியில் இடம்பெறாத இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி. இன்னொருவர் ரிசர்வு வீரராகவும் இடம்பெறாத இந்திய விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன்.

- Advertisement -

ஸ்ரேயாஸ் ஐயருக்குப் பதிலாகச் சஞ்சு சாம்சனை கட்டாயம் அணியில் எடுத்து இருக்க வேண்டும் என்று வெளியிலிருந்து சமூகவலைதளங்களில் மிகப்பெரிய ஆதரவும், இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகத்திற்கு எதிராகவும் பலர் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். அதற்குப் பிறகு இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழு, தீபக் ஹூடா மற்றும் ஸ்ரேயாஸ் இருவரையும் வெறும் பேட்ஸ்மேனாக மட்டும் பார்க்காமல், பகுதிநேர ஆப் ஸ்பின்னர்களாக பார்ப்பதாகவும், அதனால் அவரை அணியில் சேர்க்க முடியவில்லை என்றும் விளக்கம் தெரிவித்திருந்தது.

தற்போது நியூசிலாந்து ஏ அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து இந்திய ஏ அணியுடன் மூன்று டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடந்து வரும் டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகள் டிராவில் முடிந்து இருக்க, தற்போது மூன்றாவது போட்டி நடந்து கொண்டிருக்கிறது.

இதையடுத்து துவங்க இருக்கின்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்குத்தான் சஞ்சு சாம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
இந்தத் தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணி விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

பிரித்வி ஷா, அபிமன்யு ஈஸ்வரன், ருதுராஜ் கெய்க்வாட், ராகுல் திரிபாதி, ரஜத் பட்டிதார், சஞ்சு சாம்சன், கே எஸ் பரத், குல்தீப் யாதவ், சபாஷ் அகமத், ராகுல் சாகர், திலக் வர்மா, குல்தீப் சென் ஷர்துல் தாகூர், உம்ரான் மாலிக், நவ்தீப் சைனி மற்றும் ராஜ் பவா!

இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் செப்டம்பர் 22, 25, 27 ஆகிய தேதிகளில் சென்னை மைதானத்தில் நடக்க இருக்கிறது. இந்த தொடர் நடந்து கொண்டிருக்கும் பொழுதே, ஆஸ்திரேலிய அணியுடன் இந்திய அணி மோதும் டி20 தொடர் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

டி20 இந்திய உலகக் கோப்பை அணியில் இடம் தரப்படாத சூழலில் சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாகப் வெளியில் இருந்து பல குரல்கள் எழுந்தன. தற்பொழுது அந்தக் குரல்கள் ஓயும் படி அவரை கேப்டனாக அறிவித்திருக்கிறது இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம். மேலும் ஆஸ்திரேலியா சவுத் ஆப்பிரிக்கா அணிகளுடன் டி20 தொடரை ஆடி முடித்த பின்பு, சவுத் ஆப்பிரிக்கா அணியுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இருக்கிறது. இந்தத் தொடருக்கு டி20 உலகக் கோப்பை தொடருக்கு தேர்வான இந்திய வீரர்கள் யாரும் விளையாட மாட்டார்கள் என்று தெரிகிறது. அந்த ஒருநாள் தொடரில் சஞ்சு சாம்சன் களமிறங்க அதிகபட்ச வாய்ப்புகள் இருக்கிறது.