அன்று சுரஜ் ரண்டீவ்.. இன்று சுயாஷ் சர்மா ! கேகேஆர் வீரரின் தீய எண்ணம்.. ஜெய்ஷ்வால் சதத்தை தடுக்க சதி.. சிறப்பாக முறியடித்த சஞ்சு சாம்சன்.. வீடியோ

0
1514

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் கொல்கத்தா அணிகள் மோதிய ஆட்டத்தில் 21 வயதான ஜெய்ஸ்வால் தன்னுடைய ஆதரவு திறமையை நிரூபித்தார். எதிரணியின் கோட்டைக்கு சென்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் 13 பந்துகளில் அரை சதம் அடித்தார்.

இதன் மூலம் ஈடன் கார்டன் மைதானத்தில் கூடியிருந்த 60,000 பேரும் தாங்கள் கே கே ஆருக்காக ஆதரவளிக்க வந்தோம் என்பதை மறந்து ஜெய்ஷ்வாலுக்காக உற்சாக குரல் எழுப்பினர். அந்த அளவுக்கு ஜெய்ஸ்வாலின் ஆட்டம் இழந்தது. ஒரு கட்டத்தில் வெற்றிக்கு தேவையான ரன்கள் குறைவாக இருந்தது. ஜெய்ஸ்வால் சதத்தை நெருங்கிக் கொண்டிருந்தார்.

- Advertisement -

இதனால், ஜெய்ஸ்வால் சதம் அடிப்பாரா இல்லையா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஜெய்ஷ்வால் 89 ரன்னுடன் களத்தில் இருந்தார். சுழற் பந்துவீச்சாளர் சுயாஷ் ஷர்மா களத்திற்கு வந்தார்.அப்போது முதல் பந்து பேட்டில் படாமல் காலில் பட்டதற்கு ரன் ஓடினார்.

இதனை அடுத்து சஞ்சு சாம்சன் இரண்டாவது பந்தில் ரன் ஓடி ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு கொடுத்தார். இதை அடுத்து மூன்றாவது மண்ணில் ஜெய்ஸ்வால் பவுண்டரி அடித்தார். இதன் மூலம் ஜெய்ஷ்வால் 93 ரன்கள் என்ற ஸ்கோருக்கு வந்தார். இந்த நிலையில் வெற்றிக்கு 4 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது சுயாஸ் ஷர்மா வீசிய ஐந்தாவது பதில் ஜெய்ஸ்வால் ஒரு சிங்கிள் எடுத்து சாம்சனுக்கு ஸ்ட்ரைக் கொடுத்தார்.

ராஜஸ்தான் வெற்றிக்கு மூன்று ரன்கள் தேவைப்பட்டது. ஜெய்ஸ்வால் சதத்திற்கு ஆறு ரன்கள் தேவைப்பட்டது. இந்த நிலையில் ஜெய்ஸ்வால் சதம் அடிக்க கூடாது என சதி செய்த சுயஷ் ஷர்மா, கடைசி பந்தை ஓயிடாக பவுண்டரிக்கு செல்லும் வகையில் பந்து வீசினார். இந்த சதியை புரிந்து கொண்ட சாம்சன் பந்தை ஓயிடாக விடாமல் அதை இடது புறம் சென்று தனது கால்களால் தடுத்தார்.

- Advertisement -

இதன் மூலம் ஜெய்ஸ்வாலுக்கு சதம் அடிக்கும் வாய்ப்பை சாம்சன் ஏற்படுத்தி கொடுத்தார். இதை அடுத்து கையை தூக்கி சிக்ஸ் அடி என்று சஞ்சு சம்சன் ஜெய்ஸ்வாலுக்கு கூறினார்.இதை அடுத்து 14வது ஓவரில் முதல் பந்தை ஜெய்ஸ்வால் பவுண்டரிக்கு அடித்தார். இதனால் கொல்கத்தா அணி வெற்றி பெற்றாலும் ஜெயஸ்வால் 98 ரன்களை அடிக்க முடிந்தது. சுயாஸ் ஷர்மாவின் இந்த கெட்ட எண்ணம் 13 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஒரு சம்பவத்தை ஞாபகப்படுத்தியது.

2010ஆம் ஆண்டு ஷேவாக் 99 ரன்கள் இருந்த நிலையில் இலங்கை வீரர் சுராஜ் ரந்தீவ், சேவாக் சதம் அடிக்க கூடாது என்பதற்காக அதனை நோபாலாக வீசினார். இதனால் சேவாக் அந்த பந்தில் சிக்ஸர் அடித்தும் நடுவர் அவர் நோபல் வீசியதால் அந்த தருணத்திலே போட்டி முடிந்து விட்டது என்று கூறி ஷேவாக்குக்கு 6 தர மறுத்தார். இந்த விதியை தெரிந்து கொண்டு சுராஜ் ர்ந்தீப்  இவ்வாறு செயல்பட்டது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. தற்போது அப்படிப்பட்ட ஒரு செயலையும் சுயாஷ் ஷர்மாவும் செய்திருக்கிறார்.