இந்திய கிரிக்கெட்

எழுதி வச்சுக்கோங்க.. ஐபிஎல்ல வரலாறுல எங்க ரிஷப் பண்ட் இத செய்ய போறார் – லக்னோ ஓனர் சஞ்சீவ் கோயங்கா உறுதி

ஐபிஎல் வரலாற்றில் தங்களது அணிக்கு புதிதாக வாங்கப்பட்டிருக்கும் ரிஷப் பண்ட் மிக முக்கியமான சாதனை ஒன்றை படைப்பார் என அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

நடந்து முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் 27 கோடி ரூபாய் கொடுத்து லக்னோ அணி ரிஷப் பண்ட்டை ஏலத்தில் வாங்கியது. ஐபிஎல் வரலாற்றில் ஒரு வீரருக்கு கொடுக்கப்பட்ட அதிகபட்ச தொகையாக இது இருக்கிறது. ஏலத்தில் அவரை வாங்குவதில் லக்னோ மிகவும் உறுதியாக இருந்தது.

ரிஷப் பண்ட் இதை செய்வார்

இதுகுறித்து பேசி இருக்கும் லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா கூறும் பொழுது “என்னைப் பொறுத்தவரை ரிஷப் பண்ட் அடுத்த 12 அல்லது 15 ஆண்டுகள் ஐபிஎல் தொடரில் விளையாடுவார். ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான அணிகளாக சிஎஸ்கே மற்றும் மும்பை இருப்பதாக மக்கள் கூறுகிறார்கள். மேலும் வெற்றிகரமான கேப்டனாக தோனி மற்றும் ரோகித் சர்மா இருப்பதாக கூறுகிறார்கள். உண்மையில் இவர்கள் சிறந்த கேப்டன்கள். எழுதி வைத்துக் கொள்ளுங்கள் இவர்களுக்கு அடுத்து சிறந்த கேப்டனாக ரிஷப் பண்ட் வருவார்”

“என் கருத்துப்படி அவர் ஐபிஎல் வரலாற்றில் சிறந்த வீரர் மட்டும் கிடையாது. அவர் சிறந்த கேப்டனாகவும் வரப்போகிறார். நிச்சயமாக இதை காலம் நிரூபிக்கும். அவரிடம் வெற்றிக்காக இருக்கும் பசியும் ஆர்வத்தையும் நான் இன்னொரு வீரரிடம் பார்த்தது கிடையாது”

- Advertisement -

அவரை வாங்க காரணம் இதுதான்

“மெகா ஏலம் நடந்து முடிந்த பொழுது ஒவ்வொரு அணியும், தங்களுக்கு தேவையான வீரர்களை வாங்கி முடித்து மொத்தம் 120 கோடி ரூபாயை செலவு செய்திருக்கின்றன. அனைவருமே இறுதியில் சமமான தொகையைத்தான் செலவு செய்கிறோம். இங்கு தனிப்பட்ட வீரருக்கு நாம் எவ்வளவு செலவு செய்தோம் என்பது முக்கியம் கிடையாது”

இதையும் படிங்க: 1 முறை அல்ல.. 10 முறை வீழ்ந்தாலும் போராடுவேன்.. நாட்டுக்காக ஆடும் வாய்ப்பு திரும்ப கிடைக்காது – முகமது சமி உணர்ச்சி பேட்டி

“நீங்கள் வழக்கமான சிந்தனை செயல்முறையுடன் சென்றால் அது தனித்துவமானது கிடையாது. நான் அவரிடம் இயல்பான ஒரு தலைவரை பார்க்கிறேன். என்னைப் பொறுத்தவரை ஐபிஎல் தொடரில் இதுவரை பார்க்காத சிறந்த கேப்டனாக அவர் வருவார். என் அணிக்கு அவர் வேண்டும் என்பதில் நான் தெளிவாக இருந்தேன் அவரை உறுதியாக இருந்து வாங்கினேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by