1 முறை அல்ல.. 10 முறை வீழ்ந்தாலும் போராடுவேன்.. நாட்டுக்காக ஆடும் வாய்ப்பு திரும்ப கிடைக்காது – முகமது சமி உணர்ச்சி பேட்டி

0
136

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்த முகமது சமி கடந்த ஒரு நாள் உலக கோப்பையில் விளையாடி முடித்த பின்னர் குதிகால் காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்து ஓய்வு எடுத்து வந்தார்.

இந்த சூழ்நிலையில் காயம் குணமாகிய பிறகு கிரிக்கெட்டுக்கு அடியெடுத்து வைத்திருக்கும் சமி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்பு பெற்றுள்ளார். மேலும் நாட்டுக்காக விளையாடுவது குறித்து சமி சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

மீண்டும் இந்திய அணியில் முகமது ஷமி

இந்திய கிரிக்கெட் அணியில் உள்ள தற்போதைய சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் பும்ராவிற்கு அடுத்தபடியாக இருப்பவர் முகமது சமி. இந்திய அணியில் சிறப்பாக விளையாடி வரும் இவர், கடந்த ஒரு நாள் உலகக் கோப்பை தொடர்க்கு பிறகு குதிகாலில் ஏற்பட்ட காயம் கரடுமாக அறுவை சிகிச்சை செய்து ஓய்வு எடுத்து வந்தார். கிட்டத்தட்ட ஒரு வருட காலம் இந்திய அணியை விட்டு விலகிய நிலையில் உள்நாட்டு தொடரில் விளையாடி தனது உடல் தகுதியை நிரூபித்து இருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் அடுத்ததாக நடைபெற உள்ள சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடருக்கு விளையாட இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. மீண்டும் விளையாட வாய்ப்பு கிடைத்தது குறித்து சமி சில உணர்வுபூர்வமான கருத்துக்களை தெரிவிக்கின்றார். மேலும் 10 முறை காயம் அடைந்தாலும் நாட்டுக்காக விளையாட வேண்டும் என்கிற எண்ணம் அவரைத் தொடர்ந்து போராட வைப்பதாக சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

10 முறை காயம் அடைந்தாலும் போராடுவேன்

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது ” நாட்டிற்காக விளையாட வேண்டும் என்கிற பசி மட்டும் தீர்ந்து விடக்கூடாது. நீங்கள் 10 முறை காயம் அடைந்தாலும் இந்த விளையாட்டை நேசித்தால் நீங்கள் எப்போதும் போராடுவீர்கள். எனவே இந்த பசி தீர்ந்து விடக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். இது எப்போதுமே எனது மனதில் இருக்கக்கூடிய ஒரு விஷயமாகும்.

இதையும் படிங்க:5 பந்துகள் மீதம்.. சூப்பர் கிங்ஸ் வெற்றியை பறித்த டேவிட் மில்லர்.. பேர்ஸ்டோ அதிரடி வீண்.. 6 விக்கெட்டில் ராயல்ஸ் வெற்றி

நாட்டுக்காக எத்தனை போட்டியில் விளையாடினாலும் அது குறைவாகவே எனக்கு இருப்பதாக தோன்றும். கிரிக்கெட்டை விட்டு நான் வெளியேறினால் மீண்டும் இதுபோல இன்னொரு வாய்ப்பு எனக்கு கிடைக்காது” என்று முகமது சமி உணர்ச்சிகரமான கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார். கடந்த ஒரு நாள் உலகக் கோப்பை தொடரில் 7 போட்டிகளில் விளையாடிய இவர் தனது சிறப்பான பந்து வீச்சினை வெளிப்படுத்தி 10.71 சராசரியில் 24 விக்கட்டுகள் வீழ்த்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அடுத்ததாக நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபு தொடரிலும் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணிக்கு வெற்றிகளை பெற்றுக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

- Advertisement -