தோனி இருந்தும்.. ஐபிஎல் 2017 பைனலில் வெறும் 1 ரன்னில் நாங்க தோக்க காரணம் இதுதான் – சஞ்சீவ் கோயங்கா பேட்டி

0
16

ஐபிஎல் தொடரில் கே எல் ராகுல் கேப்டனாக தலைமை வகிக்கும் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணியின் உரிமையாளராக திகழ்கிறார் சஞ்சீவ் கோயங்கா. இவர் 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் இடம் பிடித்த ரைசிங் புனே சூப்பர் ஜெயின்ஸ் அணியின் உரிமையாளரும் கூட ஆவார்.

2017ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் மும்பை அணிக்கு எதிராக ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த விதம் குறித்து தனது கருத்தை சஞ்சீவ் கோயங்கா தற்போது வெளியிட்டு இருக்கிறார்.

- Advertisement -

கடந்த ஐபிஎல் தொடரில் கேஎல் ராகுல் கேப்டனாக தலைமை வைக்கும் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணியின் உரிமையாளரான சஞ்சீவ் கோயங்கா அந்தத் தொடரில் நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஒரு லீக் போட்டியின் போது வெற்றி பெறவேண்டிய ஆட்டத்தில் லக்னோ அணி தோல்வி அடைந்ததால் அணியின் தலைவர் கே.எல் ராகுலிடம் கோயங்கா கடுமையான முறையில் நடந்து கொண்டார்.

அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதற்கு முன்பாக 2016 மற்றும் 17ஆம் ஆண்டுகளில் சில சர்ச்சைகளில் சிக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு பதிலாக புனே மற்றும் குஜராத் அணிகள் களமிறங்கின. அதில் 2016ஆம் ஆண்டு எம் எஸ் தோனி தலைமையிலும் 2017ஆம் ஆண்டு ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலும் புனே அணி விளையாடியது. 17ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிப்போட்டியில் மும்பை அணிக்கு எதிரான தோல்வி குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறும் போது “எங்கள் அணியில் எம் எஸ் தோனி மற்றும் ஸ்மித் ஆகியோரை தவிர அதிக அனுபவம் கொண்ட வீரர்கள் இல்லை. இறுதி போட்டியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் அதிக அனுபவம் இல்லாததால் தோல்வியடைந்தோம். முக்கியமான தருணங்களில் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியமானது.

அதே நேரத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெறுவதை வழக்கமாக வைத்திருக்கிறது. சாகாத மனப்பான்மையை ஒவ்வொருவரும் பெற்று இருக்க வேண்டும் என்பது அவசியம். புனே அணி வெற்றி பெறவேண்டிய போட்டியாக இருந்த சமயத்தில் மும்பை அணி கொடுத்த அழுத்தத்தால் வெற்றி பெற முடியாமல் போனது. இந்த மனோபாவம் தற்போது செயல்பட்டு வரும் லக்னோ அணியிடம் இருக்க வேண்டும்.

இதையும் படிங்க:டி20 WCக்கு முன்னாடியே எனக்கு இந்த வாய்ப்பு கிடைச்சுது.. பாகிஸ்தான்க்காக இதை செய்வதில் எனக்கு விருப்பமில்லை – சோயப் மாலிக் பேட்டி

இத்தகைய மனோபாவம் இல்லையெனில் ஒரு போதும் நாங்கள் வெற்றி பெற மாட்டோம் முதலில் நம் மீது நமக்கு நம்பிக்கை வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -