ஹீரோவை வணங்கும் கலாச்சாரம் அதிகம்.. 2011-12லும் இப்பவும் இந்திய அணியின் வீழ்ச்சிக்கு அதுவே காரணம் – மஞ்சுரேக்கர் பேட்டி

0
76

இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற டெஸ்ட் தொடர்களில் எதிர்பாராத தோல்விகளை சந்தித்து பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.

இந்திய அணியின் டெஸ்ட் சரிவுக்கான முக்கிய காரணம் குறித்து இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணியின் மோசமான தோல்விகள்

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் சொந்த மண்ணில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்து அதிர்ச்சி அளித்தது. அதேபோல ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான அயல் நாட்டு மண்ணில் நடைபெற்ற ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்து 10 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை ஆஸ்திரேலியா அணியிடம் ஒப்படைத்தது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முக்கிய தோல்விக்கு காரணமாக பார்க்கப்படுவது சீனியர் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரின் மோசமான ஆட்டமும் ஒரு பகுதியாக இருக்கிறது. இந்த இரண்டு தொடர்களிலுமே இந்த சீனியர் வீரர்களின் ஆட்டம் மிக மோசமாக அமைந்ததால் இந்திய அணியால் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் சரிவுக்கு ஹீரோவை வணங்கும் கலாச்சாரமே முக்கிய காரணமாக இருக்கிறது என்று இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் கூறியிருக்கிறார்.

- Advertisement -

ஹீரோவை வணங்கும் கலாச்சாரம்

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “இந்தியா ஒரு பிரபலமான கிரிக்கெட் அணி இதை உலகம் ஆவலுடன் நடத்த விரும்புகிறது. அவர்கள் செனா நாடுகள் என்று அழைக்கப்படும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் நிறைய கிரிக்கெட் போட்டிகளை விளையாடுகிறார்கள். எனவே அவர்களை மிக உயர்ந்த தரத்திற்கு ஒப்பிடுவது நியாயமானது. இந்த தலைமுறை சரிவு அனைத்து அணிகளுக்கும் தவிர்க்க முடியாதது. இது உலகின் சிறந்த அணிகளில் ஒன்றான இந்திய அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

இதையும் படிங்க:19வது ஓவரில் நடந்த ட்விஸ்ட்.. வில் ஜாக்ஸ் குர்பாஸ் அதிரடி வீண்.. 2 ரன்னில் டர்பன் திரில் வெற்றி..எஸ்ஏ டி20 லீக்

இதற்குப் பின்னால் உள்ள முக்கிய காரணம் இந்தியாவில் நம்மிடம் உள்ள ஐகான் கலாச்சாரமும் சில வீரர்களின் ஹீரோ வழிபாடும் ஆகும். 2011 மற்றும் 12 ஆம் ஆண்டில் நிகழ்ந்த போதும் சரி, தற்போதும் சரி அதே சூழ்நிலையில் தான் விளையாடப்படுகிறது. முன்னர் ஐகான் வீரர்கள் சிறப்பாக விளையாடிய நிலையில் தற்போது அதற்கு நேர்மாறாக விளையாடுகிறார்கள். மேலும் அவர்களின் தற்போதைய செயல்பாடு அணியை கீழே தள்ளுவது போல இருக்கிறது. 2011-12ம் ஆண்டில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணியிடம் தொடர்ச்சியாக எட்டு போட்டிகளில் இந்தியா தோல்வி அடைந்தது. அப்போது சேவாக் மற்றும் சச்சின் கூட குறைவான சராசரியை வைத்திருந்தனர் என்று கூறியிருக்கிறார்

- Advertisement -