19வது ஓவரில் நடந்த ட்விஸ்ட்.. வில் ஜாக்ஸ் குர்பாஸ் அதிரடி வீண்.. 2 ரன்னில் டர்பன் திரில் வெற்றி..எஸ்ஏ டி20 லீக்

0
81

தென் ஆப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் எஸ்ஏ டி20 கிரிக்கெட் லீக் தொடரின் இரண்டாவது லீக் ஆட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இதில் டர்பன் சூப்பர் ஜெயின்ஸ் மற்றும் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.

இதில் டர்பன் சூப்பர் ஜெயின்ஸ் அணி வெறும் 2 ரன் வித்தியாசத்தில் திரில்லர் வெற்றியை ருசித்துள்ளது.

- Advertisement -

தென் ஆப்பிரிக்கா எஸ்ஏ டி20 லீக்

எஸ்ஏ டி20 மூன்றாவது சீசன் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இதன் இரண்டாவது ஆட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற டர்பன் சூப்பர் ஜெயின்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதில் பார்சன் மற்றும் பிலிப்ஸ் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 6.3 ஓவரில் 67 ரன்கள் குவித்தது. அதற்குப் பின்னர் களமிறங்கிய வில்லியம்சன் சிறப்பான ஆட்டத்தை விளையாடினார். 40 பந்துகளை எதிர்கொண்டு மூன்று பௌண்டரி மற்றும் இரண்டு சிக்சர் என 60 ரன்கள் குவித்தார்.

அதற்குப் பின்னர் இறுதியில் களமிறங்கிய மல்டர் வெறும் 19 பந்துகளில் நான்கு பௌண்டரி மற்றும் மூன்று சிக்சர் என 45 ரன்கள் குவித்து அதிரடியாக விளையாடினார். இதனால் இறுதியில் டர்பன் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் குவித்தது. அதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி பிரிட்டோரியா அணி களம் இறங்கியது. இதில் தொடக்க வீரர்களாக களம் இறங்கிய வில்ஜாக்ஸ் மற்றும் குர்பாஸ் கூட்டணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 12.1 ஓவரில் 154 ரன்கள் குவித்து முதல் விக்கட்டுக்கு அபாரமான பார்ட்னர்ஷிப்பை வெளிப்படுத்தியது.

- Advertisement -

2 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி

ஆனால் அதற்குப் பின்னால் களம் இறங்கிய வீரர்கள் யாரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதில் இரண்டு ஓவர்களில் இறுதியாக 16 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் 19 ஓவரை வீசிய கேசவ் மகாராஜ் அந்த ஓவரில் லிவிங்ஸ்டன் விக்கெட்டை வீழ்த்தியதோடு வெறும் மூன்று ரன் மட்டுமே விட்டுக் கொடுத்தார். இதுவே ஆட்டத்தின் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதற்குப் பிறகு இறுதி ஓவரில் வெறும் 11 ரன் மட்டுமே எடுக்க முடிந்ததால் விக்டோரியா அணி 20 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் மட்டுமே குவித்து இரண்டு ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றது.

இதையும் படிங்க:விராட் கேப்டனா இருந்தா அந்த சலுகை இருக்காது.. ஆனா ரோஹித் ஃபார்முலா வேற – உத்தப்பா பேட்டி

இதில் டர்பன் அணியின் நூர் அகமது நான்கு ஓவர்கள் வீசி 34 ரன்கள் விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட் கைப்பற்றினார். மேலும் கேசவ் மகாராஜ் நான்கு ஓவர்களில் 39 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றினார். இவர் வீசிய 19 ஆவது ஓவர் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. இதில் தொடக்க வீரர்கள் வில் ஜாக்ஸ் 69 ரன்களும், குர்பாஸ் 43 பந்துகளில் மூன்று பவுண்டரி மற்றும் ஏழு சிக்ஸர் என 89 ரன்கள் குவித்தனர்.

- Advertisement -