இந்திய கிரிக்கெட்

தோனி யுவராஜ் ஆடினதுதான் கஷ்டம்.. விராட் கோலி ஆடுனது ஒண்ணுமே இல்ல – சஞ்சய் மன்ச்ரேக்கர் பேச்சு

இந்திய அணிக்கு முன்னாள் வீரர் சஞ்சய் மன்ச்ரேக்கர் ஒரு நாள் கிரிக்கெட்டில் முதல் மூன்று இடங்களில் விளையாடுவது மிகவும் சுலபமானது என மீண்டும் தெரிவித்திருக்கிறார். நான்காவது இடத்தில் இருந்து ஆறாவது இடம் வரையில் விளையாடுவதுதான் கடினம் என்றும் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதற்கு முன்பாக விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் மீண்டும் சிறப்பாக விளையாடுவதற்கான வழியை கண்டறிய தவறி விட்டு, மிகவும் சுலபமான ஒருநாள் கிரிக்கெட்டை தேர்ந்தெடுத்து விட்டார் என சஞ்சய் மன்ச்ரேக்கர் விமர்சனம் செய்திருந்தார். தற்போது அதற்கான காரணம் குறித்து பேசி இருக்கிறார்.

ஒருநாள் கிரிக்கெட் எளிமையானது

இதுகுறித்து சஞ்சய் மன்ச்ரேக்கர் கூறும் பொழுது ” ஒருநாள் கிரிக்கெட் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் களுக்கு ஏன் எளிதானது என்று நான் கூறுகிறேன் என பலரும் என்னிடம் கேட்கிறார்கள். நீங்கள் இந்திய கிரிக்கெட்டில் அப்படியே சில காலம் பின்னோக்கி போங்கள். அப்போது யார் ஒருநாள் கிரிக்கெட்டில் துவக்க ஆட்டக்காரர்களாக இருந்தார்கள் என்று பாருங்கள்”

“இப்போது நீங்கள் யாரையெல்லாம் ஒரு நாள் கிரிக்கெட்டில் துவக்க ஆட்டக்காரர்களாக பார்த்தீர்களோ, அவர்களில் பெரும்பாலானவர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் நான்காவது ஐந்தாவது இடத்தில்தான் விளையாடினார்கள். அவர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் கீழ் வரிசையிலும் ஒருநாள் கிரிக்கெட்டில் மேல் வரிசையிலும் விளையாடவே விரும்பினார்கள்”

- Advertisement -

தோனி யுவராஜ் சிங் ஆடியதே கடினம்

“இதற்கான மிக முக்கிய காரணம் என்னவென்றால் உங்களுக்கு ஒருநாள் கிரிக்கெட்டில் நான்கு ஸ்லிப் மற்றும் ஒரு கல்லி இருக்காது. உங்களை நோக்கி ஓடி வரும் பந்துவீச்சாளர் உங்கள் விக்கெட்டை எடுப்பதற்கு முழு முயற்சி செய்ய மாட்டார். அவர் நீங்கள் ஓவருக்கு 10 முதல் 15 ரன்கள் எடுத்து விடாமல் கட்டுப்படுத்த மட்டுமே நினைப்பார். நீங்கள் பவர் பிளேவை தாண்டி விட்டு, ஸ்ட்ரைக்கை நன்றாக ரொட்டேட் ரொட்டேட் செய்து விளையாடுபவர் ஆக இருந்தால் எளிதாக சதம் அடிக்கலாம். இதுதான் அதில் இருக்கும் விஷயம்”

இதையும் படிங்க : அஸ்வின் போஸ்ட் செய்த மூன்று படங்கள்.. சிஎஸ்கேவில் இந்த ஆல் ரவுண்டருக்கு வாய்ப்பு தரலாம் – சூசக கோரிக்கை

“உண்மையில் ஒரு நாள் கிரிக்கெட்டில் நான்கு முதல் ஆறாவது இடம் வரையில் வந்து விளையாடுவதுதான் மிகவும் கடினமானது. தோனி, யுவராஜ் சிங் மற்றும் ரெய்னா ஆகியோர் இந்தியா அணிக்கு ஒரு நாள் கிரிக்கெட்டில் விளையாடிய இடங்களில் மிகவும் கடினமான இடங்கள்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts