அஸ்வின் போஸ்ட் செய்த மூன்று படங்கள்.. சிஎஸ்கேவில் இந்த ஆல் ரவுண்டருக்கு வாய்ப்பு தரலாம் – சூசக கோரிக்கை

0
13
Ashwin

இந்திய முன்னாள் வீர ரவிச்சந்திரன் அஸ்வின் சிஎஸ்கே பிளேயிங் லெமனில் இந்திய உள்நாட்டு வீரர் ஒருவருக்கு வாய்ப்பு கொடுப்பதை பற்றி யோசிக்க வேண்டும் என்று மூன்று புகைப்படங்களை பதிவேற்றி சூசகமாக தெரிவித்திருக்கிறார்.

கடந்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்தில் சிஎஸ்கே அணி நிர்வாகம் மிக மோசமான அணியை தேர்ந்தெடுத்தது. இதன் காரணமாக அவர்களுடைய ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்திற்கு தள்ளப்பட்ட பரிதாபம் நடந்தது. இந்த நிலையில் சிஎஸ்கே இந்த முறை மினி ஏலத்தில் பேட்டி யூனிட்டை மிக வலிமையாக மாற்றி இருக்கிறது.

- Advertisement -

200 ரன் பிரச்சனை

சிஎஸ்கே அணி கடந்து சில வருடங்களாக உருவாக்கப்படும் விதத்தில் அவர்களால் 200 ரன்னை துரத்தி வெற்றி பெற முடியாமல் இருந்து வந்தது. பெரிய இலக்கை நோக்கி விளையாடும் பொழுது அதை விரட்டி அடிப்பதற்கு அதிரடியான பேட்ஸ்மேன்கள் சிஎஸ்கே அணிகள் இல்லாமல் இருந்து வந்தார்கள். தற்பொழுது இதை நோக்கி அணி மிகவும் அதிரடியான பேட்ஸ்மேன்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது.

மேலும் தற்பொழுது பவுலிங் யூனிட்டை பொறுத்தவரையில் இந்திய வேகப்பந்துவீச்சாளர்களில் கலீல் அகமது மட்டுமே நம்பிக்கை அளிப்பவராக இருக்கிறார். ஆனால் சிஎஸ்கே நிர்வாகம் பேட்டிங் யூனிட்டை வலிமையாக்குவதில் மட்டுமே கவனம் செலுத்தி இருக்கிறது. இந்த நிலையில் மெகா எழுத்தில் 30 லட்சம் ரூபாய்க்கு வாக்கப்பட்ட மிதவேக பந்துவீச்சு ஆல் ரவுண்டர் ராமகிருஷ்ணா கோஸ் தற்போது சிறப்பான ஃபார்மில் இருந்து வருகிறார்.

- Advertisement -

ரவிச்சந்திரன் அஸ்வின் கோரிக்கை

நடப்பு விஜய் ஹசாரே டிராபியில் மகாராஷ்டிரா அணிக்காக ராமகிருஷ்ணா கோஸ் 45 ரன் ஆவரேஜில் 119 ஸ்டிரைக் ரேட்டில் 225 ரன்கள், பந்து வீச்சில் 16 ஆவரேஜில் 5.82 எக்கானமியில் 17 விக்கெட்டுகளும் கைப்பற்றி இருக்கிறார்.

இதையும் படிங்க: திலக் வர்மா காயம்.. ஸ்ரேயாஸ் ஆடக்கூடாது.. இஷான்தான் ஆட வேண்டும்.. காரணம் என்ன? – முழு அலசல்

இந்த நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் ட்விட்டரில் கடவுள்கள் ராமர் மற்றும் கிருஷ்ணர் புகைப்படங்கள் உடன் இந்திய மகளிர் அணியின் விக்கெட் கீப்பர் ரிச்சா போஸ் புகைப்படத்தை பதிவிட்டு, சிஎஸ்கே பிளேயிங் லெவனில் ஒரு உள்நாட்டு வீரருக்கு இடத்தை கண்டுபிடிக்க வேண்டும் என சூசகமாக பதிவிட்டு இருக்கிறார். அவருடைய செயல்பாடு வேகமாக வளர்ச்சி அடைந்து இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

- Advertisement -