நடப்பு ஐபிஎல் தொடரில் தற்போது ஆரஞ்சு தொப்பி சூரியகுமார் யாதவிடம் இருக்கிறது. இந்த நிலையில் இதை வைத்து சஞ்சய் மஞ்ச்ரேக்கர் மீண்டும் விராட் கோலி இடம் மறைமுகமாக வம்பு இழுத்து இருக்கிறார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் ஆரஞ்சு தொப்பி சாய் சுதர்சன், விராட் கோலி மற்றும் சூரியகுமார் யாதவ் என மூன்று பேரிடமும் மாறி மாறி சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நேற்று ராஜஸ்தான் அணிக்கு எதிராக 48 ரன்கள் எடுத்து மீண்டும் சூரியகுமார் யாதவ் ஆரஞ்சு தொட்டியை கைப்பற்றினார்.
இதற்கு முன்பாக நடப்பு ஐபிஎல் தொடரின் சிறந்த பேட்டர்கள் பட்டியலை வெளியிட்ட சஞ்சய் மஞ்ச்ரேக்கர் அதில் விராட் கோலியின் பெயரை சேர்க்கவில்லை. ஏனென்றால் 150 க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட் உடன் யார் விளையாடியிருக்கிறார்களோ அவர்களுக்கு மட்டுமே அந்த பட்டியலில் இடம் என்று அவர் கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்து கொல்கத்தாவுக்கு எதிராக சிறப்பாக விளையாடிய பஞ்சாப் துவக்க ஆட்டக்காரர்களை பாராட்டும் பொழுது முந்தைய தலைமுறையின் இந்திய பெரிய ஆட்டக்காரர்களை விட சிறப்பாக விளையாடுகிறார்கள் என்று விராட் கோலியை வம்பு இழுத்து இருந்தார். இதற்கு விராட் கோலியின் சகோதரர் விகாஸ் கோலி பதிலடி கொடுக்கவும் செய்திருந்தார்.
இந்த நிலையில் சூரியகுமார் யாதவ் 11 போட்டியில் 172 ஸ்ட்ரைக் ரேட்டில் 475 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றி இருக்கிறார். இரண்டாவது இடத்தில் சாய் சுதர்சன் 9 போட்டியில் 150 ஸ்ட்ரைக் ரேட்டில் 456 ரன்கள் எடுத்திருக்கிறார். விராட் கோலி பத்து போட்டியில் 138 ஸ்ட்ரைக் ரேட்டில் 443 ரன்கள் எடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : CSK vs RCB.. முதல்முறையா சிஎஸ்கே சரியான உத்தேச பிளேயிங் XI.. சின்னசாமியில் சம்பவம் பண்ணலாம்.. தோனி மனது வைப்பாரா?
இந்த நிலையில் ஆரஞ்சு தொப்பியை வென்றிருக்கும் சூரியகுமார் யாதவுக்கு வாழ்த்து தெரிவித்த சஞ்சய் மன்ச்ரேக்கர் “ஆரஞ்சு தொப்பி தற்போது இந்த பேட்ஸ்மேன் இடம் கூடுதல் பிரகாசமாக இருக்கிறது. ஐபிஎல் தொடரில் இதுவரையில் அதிக ரன்கள் எடுத்திருக்கிறார் மேலும் 172 ஸ்ட்ரைக்ரேட்டில் எடுத்திருக்கிறார்” என்று மீண்டும் விராட் கோலியை மறைமுகமாக வம்பு இழுத்து வாழ்த்தியிருக்கிறார். இது விராட் கோலி ரசிகர்களை கடுமையாக கோபப்படுத்தி இருக்கிறது!