நாளை ஐபிஎல் தொடரில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதிக் கொள்ளும் முக்கிய போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான சிஎஸ்கே பிளேயிங் லெவன் எப்படி அமைந்தால் சரியாக இருக்கும்? என்று பார்க்கலாம்.
தற்போது புள்ளி பட்டியலில் ஆர்சிபி அணி 10 போட்டிகளில் ஏழு வெற்றிகள் உடன் 14 புள்ளிகள் எடுத்து இரண்டாவது இடத்தில் வலிமையாக இருக்கிறது. அதே சமயத்தில் சிஎஸ்கே அணி வர்த்து போட்டிகளில் இரண்டு வெற்றிகள் மட்டுமே பெற்று நான்கு புள்ளிகள் உடன் கடைசி இடத்தில் பரிதாபமாக இருக்கிறது.
சிஎஸ்கே ரிவென்ஞ் எடுக்குமா?
கடந்த ஆண்டு ஆர்சிபி அணியிடம் சிஎஸ்கே தோல்வி அடைந்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதி வராமல் வெளியேறியதில் இருந்து இரு அணிகளுக்கும் இடையே உரசல் அதிகரித்திருக்கிறது. இது இரு அணி ரசிகர்களுக்கு இடையே மிகப்பெரிய சமூக வலைதள சண்டையாக மாறியிருக்கிறது. இந்த நிலையில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு சேப்பாக்கத்தில் வைத்து சிஎஸ்கே அணியை ஆர்சிபி இந்த முறை வென்றும் இருக்கிறது.
எனவே எப்படியாவது மாற்றி அமைக்கப்பட்ட சிஎஸ்கே அணியை வைத்துக்கொண்டு பதிலடியாக ஆர்சிபி-யின் சொந்த மைதானமான சின்னசாமியின் வீழ்த்த வேண்டும் என சிஎஸ்கே ரசிகர்கள் பெரிதும் விரும்புகிறார்கள். நிச்சயமாக சிஎஸ்கே அணி நிர்வாகமும் இந்த போட்டியை லேசாக எடுத்துக் கொள்ளாது. எனவே இரண்டு மாற்றங்கள் செய்ய வேண்டியது அந்த அணிக்கு முக்கியமாக அமைகிறது.
தோனி மனது வைப்பாரா?
சிஎஸ்கே அணியில் இடம் பெற்று இருக்கும் தீபக் ஹூடாவுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக பேட்டிங்கில் சுத்தமாக டச் இல்லை. அவர் மிகவும் ஒரு சாதாரண வீரர் போல விளையாடுகிறார். எனவே அவருடைய இடத்தில் ஒன்று இளம் வீரர் வன்ஸ் பேடி விளையாட வேண்டும். இல்லையென்றால் பந்து வீசக்கூடிய மற்றும் ஓரளவுக்கு பேட்டிங் செய்யக்கூடிய அனுபவ வீரர் அஸ்வினே வரலாம். ஆனால் எதிர்காலத்திற்காக இளம் வீரருக்கு வாய்ப்பு தருவது சரியாக இருக்கும்.
இதைவிட மிக முக்கியமாக 10 ஓவர்களுக்குப் பிறகு வரும் வேகப் பந்துவீச்சாளர் பத்திரனாவுக்கு பதிலாக ஆட்டத்தின் எல்லா பாகத்திலும் பந்து வீச முடிந்த நாதன் எல்லீஸ்க்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். அவர் பிக்பேஸ் டி20 லீக்கில் இந்த முறை மிகச் சிறப்பாக வந்து பேசி இருந்தார். இந்த ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மட்டுமே அவர் சிஎஸ்கே அணியில் விளையாட வாய்ப்பு பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதை செய்யும் பொழுது ஆர்சிபி அணியை அதன் சொந்த மைதானத்தில் வீழ்த்தும் வலிமையை சிஎஸ்கே பெற்று இருக்கும்.
இதையும் படிங்க : இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டி.. எந்த வீரர்களுக்கு வாய்ப்பு.. 15 பேர் கொண்ட உத்தேச பட்டியல்
சிஎஸ்கே பிளேயிங் XI: ஆயுஸ் மத்ரே, ஷேக் ரஷீத், சாம் கரன், டிவால்ட் பிரிவிஸ், சிவம் துபே, வன்ஸ் பேடி, ரவீந்திர ஜடேஜா, தோனி, அன்சூல் காம்போஜ், நூர் அகமத், நாதன் எல்லீஸ் மற்றும் இம்பேக்ட் பிளேயராக கலில் அகமத்.






